கனடா செல்வதற்காக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் முகவர் ஒருவரிடம் 80 இலட்ச ரூபாய் பணத்தினை வழங்கியுள்ளார் . இரண்டு வருட காலமாக கனடா அனுப்பாது முகவர் தொடர்ந்து ஏமாற்றி வந்தமையால் , பணத்தை மீள தருமாறு முகவருடன் தர்க்கப்பட்டு வந்துள்ளார்.
அதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகி இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையும் தனது பணத்தை மீள தருமாறு முகவருடன் தர்க்கம் புரிந்த நிலையிலும் பணத்தை முகவர் கொடுக்க மறுத்தமையால் , விரக்தியில் தனது உயிரை மாய்க்க முயன்றுள்ளார்
அதனை அவதானித்த வீட்டார் , அவரை மீட்டு புங்குடுதீவு வைத்திய சாலையில் அனுமதித்த நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டு , சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக