உண்மையில் NPP/JVP அர்ச்சுனா என்ற பாத்திரத்தை அரசியலில் இறக்கிவிட்டதே இந்த நோக்கத்தில்தான்.
தீவிர புலி ஆதரவளராக அர்ச்சுனாவைக் கட்டமைத்து அவரின் மூலமே புலிகளை மலினப்படுத்துவது. அவர்களின் புனிதத்தை சீரழிப்பது!
அதற்குச் சமாந்தரமாக, 100 வீத புலி எதிர்ப்பாளரும் தமிழ்த் தேசிய ஏதிர்ப்பாளருமான சுவாஸ்திகாவை வெள்ளையடித்து தமிழர் அரசியலில் முக்கிய பிரமுகர் ஆக்கும் வேலையையும் இப்போது பாராளுமன்றத்தில் இருந்தே ஆரம்பித்து வைத்திருக்கிறது சிங்களம்.
ஒரே கல்லில் பல மாங்காய்களை வீழ்த்தும் முயற்சியில் சிங்களம் மிகவும் நுட்பமாகவும் ஒருங்கிணைந்தும் வேலை செய்கிறது.
2009 க்குப் பின்னர், நேரடி வன்முறைகள், இராணுவ நடவடிக்கைகள் மூலம் இனவழிப்பை மேற்கொள்ள முடியாத நிலையில் சிங்களம் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை வெவ்வேறு வடிவங்களில் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
அதனை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் நிறைவேற்றுவதற்காக தமிழர் அர்சியலுக்குள் தனது எடுபிடிகளை வெவ்வேறு வடிவங்களில் உட்புகுத்தி வருகிறது.
அந்த வகையில் இறக்கப்பட்டவர்கள்தான் இந்த அர்ச்சுனாவும் சுவாஸ்திகாவும்.
மருத்துவத்துறை ஊழல் என்ற போர்வையில் அர்ச்சுனாவை இறக்கினார்கள் - அந்த ஊழல்கள் பற்றி இப்ப ஒரு கதையும் இல்லை. ஆனால் அவருடைய மிஷன் சக்சஸ்.
கோ கோத்தா கம போராட்டம் மூலம் சுவாஸ்திகா அரசியலில் இறக்கிவிட்டப்பட்டார்.(ஜேவியின் இன்றைய வெற்றிக்கு அத்திவாரம் போட்டவர்களே இந்த கோ கோத்தா கம போராட்டக்காரர்தான்)
ஆனால் சுவாஸ்திகா தன்னுடைய பக்குவமற்ற தன்மை, ஆர்வக்கோளாறு, அது மேதாவித்தனம் காரணமாக அவசரப்பட்டு வாயை விட்டு நோண்டியானார்.
இப்ப அர்ச்சுனா என்னும் காலாவதியாகிக் கொண்டிரு்க்கும் பாத்திரத்தை பகடை காயாக்கி சுவாஸ்திகாவை கதாநாயகி ஆக்கப் பார்க்கிறார்கள்.
கவனியுங்கள்:
இரண்டு பேரும் ஒரே நோக்கத்துக்காக இறக்கிவிடப்பட்ட எதிரெதிர் வகிபாகங்கள்.
ஒரே நாடகத்தின் இரு பாத்திரங்கள்.
ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.
இங்கே பலர் அர்ச்சுனாவின் ஆதரவாளர்களாகவும் சுவாஸ்திகா ஆதரவாளர்களாகவும் பிரிந்து மோத வைக்கப்படுகிறார்கள்.
உண்மையில் இதுதான் NPP/JVP/சிங்களத்தின் நோக்கம்!
Gnanadas Kasinathar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக