வெள்ளி, 21 மார்ச், 2025

யாழில் வெடித்துள்ள வேட்புமனுக்கள் சர்ச்சை!!

யாழில் (Jaffna) வேட்புமனுக்கள் வழக்கத்திற்கு மாறாக நிராகரிக்கப்பட்டுள்ளதாக பல தரப்பட்ட தமிழ் கட்சிகள் கேள்வியெழுப்பியுள்ளதுடன் தாம் நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் தெரிவித்துள்ளமை சர்ச்சையை கிளப்பியுள்ளது தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை பரிசீலனை செய்யும் நடவடிக்கைகள் நேற்று (20) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றன. இதையடுத்து, யாழில் வேட்புமனுக்கள் நிராகரிப்பு தொடர்பாக உத்தியோகபூர்வ அறிக்கையும் வெளியாகியிருந்தது.

வெளியாகி இருந்த அறிக்கையின் அடிப்படையில், யாழ் மாநகர சபைக்கான தமிழ் மக்கள் கூட்டணி, ஈரோஸ் ஜனாயக முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran), யாழ் மாநகர சபை உட்பட பல இடங்களில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தான் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். 

 அத்தோடு, இது தொடர்பில் அவர் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனிடம் (M. A. Sumanthiran) கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஊடகவியலாளர்கள் இது தொடர்பில் எம்.ஏ.சுமந்திரனிடம் கேள்வியெழுப்பியிருந்தனர். 

 -கேள்வி - நீதிமன்றத்தை நாடுவது குறித்து சுரேஷ் பிரேமச்சந்திரன் உங்களை தொடர்பு கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது ?- பதிலளித்த எம்.ஏ.சுமந்திரன், “ஆம், மண்டபத்திலிருந்த பலரும் இது தொடர்பில் என்னிடம் கலந்துரையாடினர். அனைவருக்கும், உதவி செய்யும் நோக்கத்துடன் சட்டத்தின் திருத்த சட்டத்தை நான் எல்லோருக்கும் விளக்கினேன். 


 நான் ஒரு கட்சியின் பொது செயலாளர் என்ற வகையில், என்னால் இன்னொரு கட்சி தொடர்பில் நீதிமன்றத்தை நாட முடியாது. இருப்பினும், இது தொடர்பில் கட்சியின் தலைமைகள் நீதிமன்றத்திற்கு சென்றால் நீதிமன்று உரிய நடவடிக்கைகளை எடுக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

இலங்கையில் ஒரு ஐஜிபியை நீக்க முடியுமா-மனித உரிமை ஆர்வலர்

மனித உரிமை ஆர்வலர், பேராசிரியர் மற்றும் வழக்கறிஞர் பிரதிபா மகாநாமஹேவா, தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு அவரது கடமைகளில் இருந்து இடைநீக...