செவ்வாய், 18 மார்ச், 2025

அமெரிக்காவை உலுக்கிய சூறாவளி 35 பேர் பலி!!

அமெரிக்காவின் தென்கிழக்கு மாகாணங்களை சூறாவளிகள் தாக்கியதில் பலர் உயிரிழந்தனர். பல வீடுகள் சேதமடைந்தன. தெருக்களில் கார்கள் கவிழ்ந்தன. மின்சாரம் கண்காணிப்பு தளமான பவர்அவுட்டேஜின் தரவுகளின்படி, 7 மாகாணங்களில் இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான கட்டங்களில் மின்சாரம் இல்லை. 

கிழக்கு லூசியானா, மேற்கு ஜார்ஜியா உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதால், மேலும் தீவிர வானிலை எதிர்பார்க்கப்படுகிறது. தென்கிழக்கு பகுதி முழுவதும் தீவிர வானிலை தொடர்ந்து நிலவி வருவதால் சில இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன. 

திடீரென ஏற்படக்கூடும் வெள்ளம் ஆபத்தானவையாக இருக்கலாம் என தேசிய வானிலை சேவை கூறியுள்ளது. சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்ட இடங்களில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல என வானிலை ஆய்வு நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

இலங்கையில் ஒரு ஐஜிபியை நீக்க முடியுமா-மனித உரிமை ஆர்வலர்

மனித உரிமை ஆர்வலர், பேராசிரியர் மற்றும் வழக்கறிஞர் பிரதிபா மகாநாமஹேவா, தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு அவரது கடமைகளில் இருந்து இடைநீக...