வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

மேற்கு ஆப்பிரிக்காவில் அதிகரிக்கும் போதைப் பழக்கத்தின் பின்னணியில் இந்திய மருந்து நிறுவனம்.

இந்திய மருந்து நிறுவனம் ஒன்று, உரிமம் பெறாத, தீவிர போதை பழக்கத்துக்கு உள்ளாக்கும் ஓபியாய்டுகளை (ஓபியம் செடியிலிருந்து தயாரிக்கப்படும் வலி நிவாரண மற்றும் சட்ட விரோத மருந்துகள்) தயாரித்து, அவற்றை மேற்கு ஆப்பிரிக்காவுக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்து, அங்கு பெரும் பொது சுகாதார நெருக்கடியை உண்டாக்குகிறது என்று பிபிசி ஐ (BBC Eye) நடத்திய புலனாய்வு விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மும்பையில் செயல்படும் ஏவியோ ஃபார்மாகியூட்டிகள்ஸ் எனும் மருந்து உற்பத்தி நிறுவனம் பல்வேறு வணிக பெயர்களில் மாத்திரைகளை தயாரித்து, சட்டபூர்வமான மருந்துகள் போன்று தோற்றமளிக்கும் வகையில் அவற்றை உற்பத்தி செய்கின்றன. ஆனால், அவை அனைத்தும் ஒரே மாதிரியான ஆபத்தான கலவையைக் கொண்டுள்ளன. அதில் டேபெண்டடால் என்ற சக்திவாய்ந்த மருந்துப்பொருள் மற்றும் காரிஸோப்ரோடால் என்ற மிகவும் அடிமையாக்கக்கூடிய தசை தளர்த்தி போன்றவை உள்ளன. 

மேலும், இது ஐரோப்பாவில் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மருந்துகளை உலகில் வேறு எங்கும் பயன்படுத்த உரிமம் கிடையாது. இது சுவாசக்கோளாறுகள் மற்றும் வலிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அறியப்படுகின்றது. இவற்றை அதிக அளவில் எடுத்துக்கொண்டால் உயிரிழப்பும் ஏற்படலாம். 

இத்தனை ஆபத்துகள் இருந்தாலும், இந்த மருந்துப் பொருட்கள் பல்வேறு மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளின் தெருக்களில் விற்கப்படும் பிரபலமான போதைப் பொருட்களாக உள்ளன. ஏனென்றால், அவை மிக மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கின்றன.கானா, நைஜீரியா, கோட் டிவோயர் போன்ற நாடுகளின் தெருக்களில், ஏவியோ நிறுவனத்தின் முத்திரையிடப்பட்ட பாக்கெட்டுகளில் இம்மருந்துகள் விற்பனைக்குக் கிடைப்பதை பிபிசியின் உலக சேவை கண்டறிந்துள்ளது. 

 இந்தியாவில் உள்ள ஏவியோவின் தொழிற்சாலையில் இருந்த போதைப் பொருட்களைக் கண்டறிந்த பிபிசி, ஒருவரை உளவு பார்க்க, ரகசியமாக அந்த தொழிற்சாலைக்குள் அனுப்பியது. அவர், ஆப்பிரிக்க தொழிலதிபராக தன்னைக் காட்டிக்கொண்டு, நைஜீரியாவுக்கு போதை மருந்துகளை விற்க விரும்புவதாகக் கூறினார். 

பிபிசி மேற்கு ஆப்பிரிக்காவின் சந்தையில் கண்ட அதே ஆபத்தான தயாரிப்புகளை, ஏவியோ நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான வினோத் ஷர்மா எடுத்துக் காட்டும் காட்சிகளை, ஒரு மறைமுக கேமராவைப் பயன்படுத்தி பிபிசி படம் பிடித்தது. மறைமுகமாக பதிவு செய்யப்பட்ட காட்சிகளில், அந்த உளவாளி வினோத் ஷர்மாவிடம், நைஜீரியாவில் "இந்த தயாரிப்பை விரும்பும்" இளைஞர்களிடம் விற்கத் திட்டமிட்டு இருக்கிறேன் என்று கூறுகிறார்.

ஷர்மா அதற்கு சிறிதும் சளைக்காமல், "சரி" என பதிலளிக்கிறார். பின்னர், இவற்றைப் பயன்படுத்துபவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று மாத்திரைகள் எடுத்துக்கொண்டால், "ஓய்வு கிடைக்கும்" என்றும், அவர்கள் "(போதையின்) உச்ச நிலையை அடையலாம்" என்பதையும் ஒப்புக்கொள்கிறார். 

சந்திப்பின் முடிவில், "இது ஆரோக்கியத்துக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்" என்று கூறும் ஷர்மா, "இப்போதெல்லாம், இது தான் வியாபாரம்" என்றும் தெரிவித்தார்.அந்த தொழிற்சாலையில், கலவை மருந்துகள் நிரப்பப்பட்ட பெரிய பெட்டிகள் ஒன்றின் மேல் ஒன்றாக, கூரையின் உயரத்துக்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. வினோத் ஷர்மா தனது மேசையில், டேபெண்டடால்-காரிஸோப்ரோடால் கலவையுடன் கூடிய மாத்திரை பாக்கெட்டுகளை அடுக்கி வைத்திருந்தார். 

அவற்றுள் மிகவும் பிரபலமான டாஃப்ரோடோல் உட்பட, டிமாகிங் மற்றும் சூப்பர் ராயல்-225 போன்ற பல்வேறு பெயர்களில், அந்த நிறுவனம் சந்தைப்படுத்துகிறது. இந்தத் தொழில், மேற்கு ஆப்பிரிக்கா முழுவதுமுள்ள பல லட்சக்கணக்கான இளைஞர்களின் உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்து, அவர்களின் திறனை அழித்துக்கொண்டிருக்கின்றது. 

கானாவின் வடக்கு பகுதியிலுள்ள டமாலே நகரத்தில், பல இளைஞர்கள் சட்டவிரோத மருந்துப் பொருட்களை எடுத்துக்கொள்வதால், அந்த நகரின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான அல்ஹசன் மஹாம், உள்ளூரைச் சேர்ந்த சுமார் 100 பேரை கொண்ட தன்னார்வக்குழுவை உருவாக்கியுள்ளார். போதைப்பொருள் விற்பனையாளர்களை தேடித் பிடித்து, இந்த மாத்திரைகளை வீதிகளிலிருந்து அகற்றுவது அவர்களது முக்கியப் பணியாக உள்ளது. "நெருப்பில் மண்ணெண்ணெய் ஊற்றினால் எப்படிப் பற்றிக் கொள்கிறதோ, அதேபோல இந்த ஓபியாய்டுகள், அவற்றை தவறாக பயன்படுத்துபவர்களின் புத்திசாலித்தனத்தை அழிக்கின்றன" என்று மஹாம் தெரிவித்தார்.

 "இவை எங்களுடைய வாழ்க்கையையே வீணடித்துவிட்டன" என்று டமாலேயில் போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவர் அதை இன்னும் எளிமையாகக் கூறுகிறார். இருசக்கர வாகனங்களில் ஏறிச் சென்ற அந்த தன்னார்வக் குழுவினரை, பிபிசியின் குழு பின்தொடர்ந்து சென்றது. 

 ஒரு போதைப்பொருள் ஒப்பந்தத்தைப் பற்றி தகவல் கிடைத்த நிலையில், டமாலேயின் மிகவும் ஏழ்மையான பகுதியில் சோதனை தொடங்கியது. அவர்கள் செல்லும் வழியில், ஒரு இளைஞர் மயக்கத்தில் சரிந்து கிடந்தார். உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, அவர் இந்த மருந்துகளை உட்கொண்டிருந்தார் என அறியப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியல் .

இலங்கையில் நியமிக்கப்பட்ட நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலைத் திருத்தும் ஒரு அசாதாரண வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளத...