அதிபர் டிரம்பின் முடிவுக்கு, செனட் சபையில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், வாக்கெடுப்பில் 51-49 வாக்குகளுடன் காஷ் படேலின் நியமனம் உறுதி செய்யப்பட்டது.
குடியரசுக் கட்சி செனட்டர்களான மைனேயைச் சேர்ந்த சூசன் காலின்ஸ் மற்றும் அலாஸ்காவைச் சேர்ந்த லிசா முர்கோவ்ஸ்கி ஆகியோரைத் தவிர, மற்ற அனைவரும் காஷ் படேலுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
பேஸ் பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்று, கூட்டாட்சி வழக்கறிஞராகப் பணியாற்றிய காஷ் படேல் எப்பிஐ-யின் இயக்குனராக நியமிக்கப்பட்டதற்கு பலரும் பாராட்டும் தெரிவித்துள்ளனர். கடந்த 1980ம் ஆண்டு நியூயார்க்கின் கார்டன் சிட்டியில், இந்திய குஜராத்தி தம்பதிக்கு காஷ் படேல் பிறந்தார்.
அவரது பெற்றோர் கிழக்கு ஆப்பிரிக்காவின் உகாண்டாவிலிருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தனர்.
அங்கு அவர்கள் இன ஒடுக்குமுறையை எதிர்கொண்டதை தொடர்ந்து அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இந்நிலையில் காஷ் படேல் வெளியிட்டுள்ள பதிவில், ‘பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் நிறுவனத்தின் (எப்பிஐ) ஒன்பதாவது இயக்குநராக நியமிக்கப்பட்டதில் பெருமையடைகிறேன்.
9/11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவை பாதுகாப்பது வரை எப்பிஐ சிறப்புமிக்க மரபைக் கொண்டுள்ளது. இயக்குநராக எனது பணியை சிறப்பாக செய்வேன். எப்பிஐ மீதான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவோம்’ என குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக