வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

சென்னையில் இளைஞரைக் கொன்று இன்ஸ்டாகிராமில் 'ரீல்ஸ்'

"சென்னை அண்ணா நகர் அருகே முகமூடி அணிந்த ஆறு நபர்கள் ராபர்ட் என்ற சரித்திரப் பதிவேடு குற்றவாளியைக் கொலை செய்து அது தொடர்பான செய்தியை இன்ஸ்டாகிராமில் அந்தக் கொலை கும்பல் பதிவு செய்ததாக" டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. அதுகுறித்த செய்தியில், "புதன்கிழமை மாலை ராபர்ட் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அது தொடர்பான தகவலை அந்தக் கொலை கும்பல் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக பதிவு செய்து அதில், 'ராபர்ட் மட்டை 100%' என்று குறிப்பிட்டுள்ளனர். அதாவது ராபர்ட் இறந்தது 100% உறுதியாகிவிட்டது என்று அவர்கள் இன்ஸ்டாகிராமில் பதிவுட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், லோகு என்ற சரித்திரப் பதிவேட்டு குற்றவாளிக்கும் ராபர்ட்டுக்கும் இடையே கஞ்சா விற்பனையில் முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

"சம்பவம் நடந்த தினத்தன்று தன்னுடைய தந்தைக்காக ராபர்ட் வாசலில் காத்துக் கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த 6 நபர்கள் அவரைக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ராபர்ட்டின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸை தொடர்ந்து இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 6 நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

இலங்கை அரசாங்கத்தின் டிஜிட்டல் உருமாற்றத் திட்டங்களில் இறையாண்மை மேகமும் அடங்கும்.

அரசாங்க இறையாண்மை மேகத்தை கருத்தியல் ரீதியாக உருவாக்குவதற்காக அரசாங்கம் பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தரப்பினருடன் கலந்துரையாடி வருகிறது, மே...