கருத்தரங்கில் நிறைவுரை ஆற்ற இசைவு தெரிவித்திருக்கும் முதலமைச்சருக்கு அன்போடு அழைப்பிதழ் தந்தேன். ஒருவரை ஒருவர் பார்த்ததும் இருவருமே மலர்ந்துவிடுகிறோம்.
அவரது பாசாங்கில்லாத பாசம் எப்போதும் பரவசப்படுத்துகிறது. பொன்கூட்டி வருகிற பிறந்த நாளுக்கு முன்கூட்டி வாழ்த்துச் சொன்னேன் விழாகுறித்து விசாரித்தார். கருத்தரங்கில் இந்திய அளவிலும் உலக அளவிலும் புகழ்மிக்க அறிஞர் பெருமக்கள் ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கிறார்கள்.
உச்சநீதிமன்றத்தின் மாண்பமை நீதியரசர் ஆர்.மகாதேவன் கருத்தரங்கத்தைத் தொடங்கி வைக்கிறார். மறைமலை இலக்குவனார் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த‘Vairamuthu’s Mahakavithai’ என்ற ஆங்கில நூலை ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிடுகிறார்; மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் முதற்படி பெறுகிறார்.
வைரமுத்தியம் என்ற கருத்தரங்கக் கட்டுரைத் தொகுப்பை மாண்புமிகு முதலமைச்சர் வெளியிடுகிறார்; எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி முதற்படி பெறுகிறார். 53 ஆண்டுகள் நுரைக்க நுரைக்க ஓடிவந்த ஓட்டப் பந்தயத்தில் எனக்கு வழங்கப்படவிருக்கும் ஒருகோப்பைப் பழச்சாறுதான் இந்தப்பன்னாட்டுக் கருத்தரங்கம். விழாவில் பங்கேற்கும் அறிவுலகத்தை நெற்றி நிலம்பட வணங்குகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக