ஞாயிறு, 9 பிப்ரவரி, 2025

யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகம்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்தை நிறுவ அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று நடைபெற்ற விழாவொன்றில் பங்கேற்றபோது கருத்துத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நிறுவப்படவுள்ள புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகமும் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்று அவர் மேலும் கூறினார். அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் நிறுவப்படவுள்ள புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்திற்கு ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போது, இது தொடர்பிலான‌ அமைச்சரவை முடிவானது பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. பொதுச் சேவை ஆணைக்குழு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் அதற்கான முடிவை எடுக்கும். அந்த முடிவு எடுக்கப்பட்ட பிறகு, இந்த அலுவலகத்தை 24 மணி நேரமும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியல் .

இலங்கையில் நியமிக்கப்பட்ட நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலைத் திருத்தும் ஒரு அசாதாரண வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளத...