செவ்வாய், 25 பிப்ரவரி, 2025

ஐ.நா.வில் ரஷ்யாவுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா!

யுக்ரேன் விவகாரத்தில் எந்தவொரு அமைதி ஒப்பந்தமும் பாதுகாப்பு உத்தரவாதங்களுடன் இருக்க வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்த பின்னர் அவர் இதனை கூறினார். 

 "இந்த அமைதி யுக்ரேனின் சரணாகதியாக இருக்கக் கூடாது. இது பாதுகாப்பு உத்தரவாதங்கள் இல்லாத போர் நிறுத்தமாக இருக்கக்கூடாது" என்று டிரம்புடனான சந்திப்புக்கு பின் திங்களன்று இரு தலைவர்களும் நடத்திய கூட்டு செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார். பாதுகாப்பு உத்தரவாதங்களைப் பற்றி குறிப்பிடாத டிரம்ப், யுக்ரேனில் அமைதியைப் பராமரிப்பதற்கான செலவு மற்றும் சுமையை அமெரிக்காவுடன் ஐரோப்பிய நாடுகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றார். 

 "பாதுகாப்பு சுமையை மிகவும் நியாயமாக பகிர்ந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஐரோப்பா புரிந்துகொண்டுள்ளது" என்று மக்ரோன் பதிலளித்தார். 

ரஷ்ய படையெடுப்பு நடந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், பேச்சுவார்த்தை ஒரு முன்னேற்ற பாதையில் நகர்ந்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். கூட்டம் முழுவதும் இருவரும் சுமூகமான வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டாலும், ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது யுக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பிரச்னையில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தது தெளிவாக வெளிப்பட்டது.

உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகளை திரும்பப்பெற வலியுறுத்தி ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது. 93 நாடுகள் ஆதரவாகவும், 18 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்திய உள்பட 65 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.

சமாதான உடன்பாட்டில் பாதுகாப்பு உத்தரவாதங்கள் இடம்பெறும் விஷயம் முக்கிய வேறுபாடாகும். அதேபோல், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் இரு தலைவர்களுக்கும் இடையில் வேறுபாடுகள் இருந்தன. விரைவில் போர் நிறுத்தம் செய்ய விரும்புவதாகவும், உடன்பாடு ஏற்பட்டவுடன் ரஷ்யா சென்று அதிபர் புதினை சந்திக்க உள்ளதாகவும் டிரம்ப் கூறினார். எனினும், மக்ரோன் போர் நிறுத்தம் மற்றும் யுக்ரேனின் நீடித்த பாதுகாப்புக்கான தெளிவான உத்தரவாதங்களை கொண்ட ஒரு பரந்த சமாதான ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும் என்றார். "நாங்கள் அமைதி விரைவில் வேண்டும் என்று விரும்புகிறோம், ஆனால் பலவீனமான ஒரு ஒப்பந்தத்தை நாங்கள் விரும்பவில்லை," என்று அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

நீதிக்கு புறம்பான கொலைகள் குறித்து BASL கவலை தெரிவித்துள்ளது.

சட்ட அமலாக்க அதிகாரிகளின் காவலிலும் நீதிமன்ற அறைக்குள்ளும் சந்தேக நபர்கள் கொல்லப்படுவது தொடர்பான சமீபத்திய சம்பவங்கள் குறித்து இலங்கை வழக்கற...