ஞாயிறு, 26 ஜனவரி, 2025

ஹைதராபாத் மனைவியை கொன்று, உடலை துண்டாக்கி குக்கரில் சமைத்ததாக புகார்.

ஹைதராபாத் மீர்பேட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண் ஒருவர் காணாமல் போனதாக எழுந்த புகார், தற்போது நாடு முழுவதும் பரபரப்பான ஒன்றாக உருவெடுத்துள்ளது. காணாமல் போவது தொடர்பான வழக்குகள் வழக்கமான ஒன்றே. ஆனால் இந்த சம்பவம் மனதை மிகவும் தொந்தரவு செய்வதாக உள்ளது. இந்த வழக்கில், மாதவி என்று அடையாளம் காணப்பட்ட பெண்ணை அவருடைய கணவர் குருமூர்த்தி கொலை செய்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.

 இந்த வழக்கு தொடர்பான பல தகவல்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ஆனால் அவை இன்னும் காவல்துறையினரால் உறுதிப்படுத்தப்படவில்லை. மனைவியின் உடலை துண்டுதுண்டாக்கி, குக்கரில் போட்டு சமைத்ததாக, ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக வெவ்வேறு ஊகங்கள் உள்ளூர், தேசிய ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகின்றன. ஆனால், மாதவி கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்தோ, ஊடகங்களில் இதுதொடர்பாக வெளியாகும் தகவல்கள் குறித்தோ காவல்துறை இனிதான் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த வேண்டும். 

.ஹைதராபாத்தின் புறநகரில் ஜில்லேலகுடா எனும் பகுதியிலுள்ள நியூ வெங்கடேஸ்வரா காலனியில் புட்ட குருமூர்த்தி என்பவரும் அவருடைய மனைவி வேங்கட மாதவியும் கடந்த ஐந்தாண்டுகளாக வசித்துவந்தனர் . அவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். 

 பிரகாசம் மாவட்டத்தின் ராச்சர்லா மண்டலத்தில் உள்ள ஜேபி செருவு எனும் கிராமம்தான் இவர்களின் பூர்வீகம். குருமூர்த்தி ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் தற்போது தனியார் காவலாளியாக பணியாற்றி வருவதாக, மீர்பேட் காவல் ஆய்வாளர் கீசரா நாகராஜு கூறினார்.மாதவி காணாமல் போனதாக கடந்த 18-ம் தேதி காவல் நிலையத்தில் புகார் பதிவானது. மீர்பேட் காவல் நிலையத்தில் மாதவியின் தாய் உப்பல சுப்பம்மா தான் இந்த புகாரை அளித்தார். 

 "கடந்த 16-ஆம் தேதி என் மகள் மாதவிக்கும் அவருடைய கணவர் குருமூர்த்திக்கும் சிறு சண்டை ஏற்பட்டது. இதனால், என் மகள் மதியம் வீட்டிலிருந்து யாருக்கும் சொல்லாமல் வெளியேறிவிட்டார். அக்கம்பக்கத்தினர், தெரிந்தவர்கள், உறவினர்களின் வீடுகளில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை," என காவல்துறையினரிடம் சுப்பம்மா புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக மீர்பேட் காவல் நிலையத்தில் மாதவி காணாமல் போனதாக வழக்கு (8.1/2025) பதியப்பட்டது. 

வழக்கு விசாரணையின் போது காவல்துறையினர் சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்தனர்."கடந்த 15-ஆம் தேதி மாதவியும் குருமூர்த்தியும் வீட்டுக்கு வந்துள்ளனர். பின்னர், மாதவி குறித்த தடயங்கள் ஏதும் இல்லை. இதுதொடர்பாக சிசிடிவி பதிவுகளையும் ஆராய்ந்தோம். மாதவியின் பெற்றோரிடம் இதுகுறித்து விசாரித்த போது, குருமூர்த்தி மீது அவர்கள் சந்தேகங்களை எழுப்பினர். 

ஆனால், அந்நிறுவனத்தின் கருத்துகளை பெற முடியவில்லை. குருமூர்த்தி தன் மனைவியை கொன்று, உடல் பாகங்களை துண்டு, துண்டாக்கியதாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த உடல் பாகங்களை அழிப்பதற்கு குருமூர்த்தி என்ன செய்தார் என்பது குறித்த கொடூரமான, கோரமான தகவல்கள் ஊடகங்களில் பரவலாக வெளியாகி வருகின்றன.

 ஆனால், இந்த தகவல்களை காவல்துறை எங்கும் உறுதிப்படுத்தவில்லை. "குருமூர்த்திக்கு எதிராக மாதவியின் பெற்றோர் எழுப்பிய சந்தேகங்களின் அடிப்படையில், இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது," என மீர்பேட் காவல் ஆய்வாளர் நாகராஜு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

தமிழ் மொழித் தியாகிகள் நினைவுநாள் – வரலாறு

1938 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி தொடங்கிய மொழிப்போர் ஒன்றரை ஆண்டுக்காலம் தொடர்ந்து நடந்தது. இதில் மாணவர்கள் பலரும் பங்கு கொண்டனர். பல்லாயிரம் ...