புதன், 4 டிசம்பர், 2024

அர்ச்சுனா ராமநாதன் பாராளுமன்றத்தில் தாக்குதல் குற்றம் சுமத்தியுள்ளார்!!

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் வைத்து இன்று (03) தாக்கப்பட்டதாக யாழ் மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் அர்ச்சுனா இராமநாதன் குற்றம் சுமத்தியுள்ளார். இன்று (03) பாராளுமன்ற அமர்வின் போது சபையில் உரையாற்றிய அவர், தாக்குதல் நடத்தியவர் ‘சுஜித்’ என்ற நபர் என கூறினார். நாடாளுமன்றத்தில் டாக்டர் அர்ச்சுனா தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நான் மதியம் 2:30 மணியளவில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்குச் சென்றேன். 

நேர ஒதுக்கீடு (பேச) பற்றி விசாரித்தேன். இன்று எனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. நாளைக்கு நேரம் கிடைக்குதா இல்லையா என்று கேட்க சென்றேன். அங்கு அதிகாரிகள் இருந்தனர். 

என்னை வேறு அறைக்கு அழைத்துச் சென்றார்கள். சுமார் 4.00 மணி வரை நேரம் ஒதுக்கலாம் என்றார்கள். நாளை" அவ்வாறு தீர்மானங்களை எடுப்பதற்கு அவர்களுக்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அவர்களிடம் வினவிய போது, ​​'சுஜித்' என்ற நபருடனும் மற்றுமொரு நபருடனும் பேசுமாறு கூறியதாக யாழ்.மாவட்ட எம்.பி மேலும் விளக்கமளித்துள்ளார். 

 “அப்போது அவர்கள் சுயமாக முடிவெடுக்க முடியாது என்று சொன்னேன். கட்சித் தலைவர் என்ற முறையில் இதற்கு பதில் அளிக்க வேண்டும். அப்போதுதான் ‘சுஜித்’ என்ற நபர் என்னைத் தாக்கினார். நான் அவரை திருப்பி அடிக்க விரும்பவில்லை. அவருக்கு என் தந்தையின் வயது இருக்கும். அதனால்தான் நான் அவரை அடிக்கவில்லை, ”என்று அவர் மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

இன்று வெளியாகும் சர்ச்சைக்குரிய மதுபானசாலை அனுமதிப்பத்திர பட்டியல்!!

சர்ச்சைக்குரிய மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் தொடர்பிலான அறிக்கையை இன்று மாலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் அது தொடர்பிலான விசாரணைகள்...