அனலைதீவில் இருந்து கடந்த 10/06/2023 அன்றையதினம் கடல் சீற்றம் காரணமாக தமிழக மீனவர்களால் காப்பற்றப்பட்டு நீதிமன்ற நடவடிக்கையின் பின் திருச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்ட மீனவர்கள் இருவரும் கடந்த 30 திகதி நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு இன்று திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அனலைதீவைச் சேர்ந்த திருச்செல்வம் மைக்கல் பெர்னாண்டோ, நாகலிங்கம் விஐயகுமார் ஆகிய இருவருமே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களாவர்.
இவர்களை நீதிமன்ற தீர்பின் படி படகுகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளதற்கு இணங்க படகு மற்றும் வெளி இணைப்பு இயந்திரம் அடங்கலாக கடல் மார்க்கமாக விடுதலை செய்ய வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக