2011 இல் அல் கொய்தாவின் நேரடி இணைப்பாக ‘ஜபத் அல்-நுஸ்ரா’ (Jabhat al-Nusra) என்ற வேறு பெயரில் ‘ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்’ அமைக்கப்பட்டது.
இஸ்லாமிய அரசு (IS) என தன்னை தானே அழைத்துக்கொள்ளும் குழுவின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதியும் ஜபத் அல்-நுஸ்ராவின் உருவாக்கத்தில் ஈடுபட்டார்.
சிரியா அதிபர் அசாத்துக்கு எதிரான குழுக்களில், தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கொடிய குழுவாக இது கருதப்பட்டது.
ஆனால் அதன் புரட்சிகரக் கொள்கையை விட, ‘ஜிஹாதி சித்தாந்தம்’ அக்குழுவின் உந்து சக்தியாக கருதப்படுகிறது.
மேலும் அந்த நேரத்தில், “சுதந்திர சிரியா” எனும் பெயரில் இயங்கும் முக்கிய கிளர்ச்சிக் கூட்டணியுடன் இந்தக்குழு முரண்படுவதாகவும் அறியப்பட்டது.
2016-ஆம் ஆண்டில், இக்குழுவின் தலைவரான அபு முகமது அல்-ஜவ்லானி, அல் கொய்தாவுடன் உள்ள தொடர்பைப் பகிரங்கமாகப் பிரிந்து, ஜபத் அல்-நுஸ்ராவை கலைத்தார்.
பின்னர் ஒரு புதிய அமைப்பை நிறுவினார்.
ஒரு வருடம் கழித்து, இதே போன்ற பிற குழுக்களுடன் இணைந்தபோது ‘ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்’ என்ற பெயரை இக்குழுப் பெற்றது.கடந்த நான்கு ஆண்டுகளாக சிரியாவில் போர் முடிந்துவிட்டதாக கருதப்பட்டது.
நாட்டின் முக்கிய நகரங்களில், பிற ஆட்சியாளர்களின் போட்டியின்றி, சிரிய அதிபர் பஷர் அல்-அசாத்தின் ஆட்சி உள்ளது.
ஆனால் அதே நேரத்தில், சிரியாவின் வேறு சில பகுதிகள் அவரது நேரடி கட்டுப்பாட்டில் இல்லை.
கிழக்கில் குர்து இன மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகள் இதில் அடங்கும்.
அவை மோதலின் தொடக்க காலம் முதல், சிரியா அரசின் கட்டுப்பாட்டிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளன.
2011 இல் அசாத்தின் ஆட்சிக்கு எதிராக தெற்கில் புரட்சி தொடங்கியது. அதைத் தொடந்து, அங்கு அமைதியின்மை நிலவத் தொடங்கியது.
பரந்த சிரியா பாலைவனத்தில், ஐ.எஸ் அமைப்பு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் குழுவைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். குறிப்பாக அதிக லாபம் ட்ரப்ல் எனும் காளான் வகையை சேகரிக்க மக்கள் அப்பகுதிக்குச் செல்லும் போது, அவர்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர்.
சிரியாவின் வடமேற்கில் உள்ள ‘இட்லிப் மாகாணம்’ ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இட்லிப்பில் உள்ள ஆதிக்க சக்தியான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அமைப்பு அலெப்போ மீது திடீர் தாக்குதலை நடத்தியது.பல ஆண்டுகளாக, சிரியா அரசாங்கப் படைகள் தனது கட்டுப்பாட்டை மீட்டெடுக்க முயன்றதால், இட்லிப் பகுதி போர்க்களமாகவே இருந்தது.
ஆனால் நீண்டகாலமாக அசாத்தின் முக்கியக் கூட்டாளியாக இருந்த ரஷ்யா மற்றும் கிளர்ச்சியாளர்களை ஆதரித்த துருக்கியால் 2020 இல் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது .
சுமார் நான்கு மில்லியன் மக்கள் அங்கு வாழ்கின்றனர்.
அவர்களில் பெரும்பாலோர், போரில் அசாத்தின் படைகள் வென்ற நகரங்களிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள்.
அலெப்போ கடும் பாதிப்பை சந்தித்த போர்க்களங்களில் ஒன்று .மேலும் போராட்டக்காரர்கள் பெரிய அளவில் தோல்வியடைந்த இடங்களிலும் ஒன்றாகும்.
வெற்றி அடைய, ரஷ்ய விமானப்படை மற்றும் இரானின் ராணுவ உதவியை அசாத் நம்பினார்.முக்கியமாக இரானால் ஆதரிக்கப்படும் ஆயுதக்குழுவின் உதவி மூலம் அசாத் வெற்றியை எதிர்நோக்கி இருந்தார்.
இதில் ஹெஸ்பொலாவும் அடங்கும்.
லெபனானில் ஹெஸ்பொலா மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல் மற்றும் சிரியாவில் இரானிய ராணுவத் தலைவர்கள் மீது நடந்த தாக்குதலின் விளைவாக, இட்லிப்பில் உள்ள ஜிஹாதிகள் மற்றும் புரட்சிக் குழுக்கள், இச்சூழ்நிலையைப் பயன்படுத்தி அலெப்போ மீது திடீர் தாக்குதல் நடத்த ஊக்குவித்திருக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக