சனி, 9 நவம்பர், 2024

நாராஹேன்பிட்டியில் நிதி மோசடியில் ஈடுபட்ட குழு ஒன்று கைது !!

இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 58 இலங்கையர்கள் அடங்கிய குழு ஒன்றை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நாராஹேன்பிட்டியில் வைத்து இந்தக் குழுவினரை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதரகத்திலிருந்தே இந்த முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. கொரியாவில் உள்ள கொரிய பிரஜை ஒருவரின் பணம். இலங்கை நாணயத்தின் அடிப்படையில் சுமார் 30 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது." "அதன்படி நேற்று இந்த இடத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்த இடமானது மாத வாடகையாக 90 இலட்சம் ரூபாவுக்கு மேல் செலுத்தி நடத்தப்பட்டு வந்துள்ளது.

" "பின்னர், இது இணைவழி ஊடாக பணம் பறிக்கும் முகாமாக செயற்பட்டு வந்தமை தெரியவந்துள்ளது." "கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் பணிப்பாளராக பணிபுரியும் கொழும்பு 07 பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய பெண்ணும், முகாமையாளராகப் பணிபுரியும் 40 வயதுடைய றாகம பகுதியைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர்.

" "இதில் வேறு சிலருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் கிடைத்தது. இந்த இடம் வெளிநாட்டில் இருந்து வெளிநாட்டவர்களால் இது நடத்தப்பட்டதாக தகவல் உள்ளது. அவர்களின் இலக்கு வெளி நாடுகளில் உள்ளவர்களாகும்." என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

தடுப்பூசி சந்தேகம் "அமெரிக்காவை மீண்டும் ஆரோக்கியமாக மாற்ற உதவும்-டிரம்ப்

"தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள், மாசுகள், பூச்சிக்கொல்லிகள், மருந்து பொருட்கள் மற்றும் உணவு சேர்க்கைகள்" ஆகியவற்றிலிருந்து பாதுகா...