வெள்ளி, 8 நவம்பர், 2024

றாகம இலஞ்சம் பெற்ற அதிபர் கைது!!

றாகம பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் பெண் அதிபர் ஒருவர் நேற்று பிற்பகல் 150,000 ரூபா இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். றாகம, மட்டுமாகல பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புலனாய்வுப் பிரிவினரால் அவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.


முறைப்பாட்டாளரின் பிள்ளையை 2025ஆம் ஆண்டு முதலாம் தரத்தில் சேர்ப்பதற்கு இலஞ்சமாக இந்தப் பணத்தை சம்பந்தப்பட்ட அதிபர் கேட்டுள்ளதாகவும் குறித்த பணத்தை நேற்று பிற்பகல் 4:00 மணியளவில் பாடசாலையின் காரியாலயத்தில் வைத்து வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த அதிபர் கைது செய்யப்பட்டுள்ளாா்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

CIDயில் வாக்குமூலம் வழங்குமாறு தாம்புகலவுக்கு உத்தரவு!!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் வழங்குமாறு வர்த்தகர் விரஞ்சித் தாம்புகலவுக்...