சனி, 2 நவம்பர், 2024

யாழ்ப்பாணம் பலாலி வீதி 34 வருடங்களுக்கு பின்னர் வீதி திறப்பு!!

யாழ்ப்பாணம் பலாலி வீதி – வசாவிளான் சந்தி – தோலகட்டி சந்தி வரையிலான வீதி 34 வருடங்களுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்திற்காக வெள்ளிக்கிழமை காலை ஆறு மணி முதல் அனுமதிக்கப்பட்டது. 

யாழ்ப்பாணம் பலாலி வீதியில் வயாவிளான் மத்திய கல்லூரியில் இருந்து வயாவிளான் சந்தி, அதிலிருந்து அச்சுவேலி வீதியில் தோலகட்டி வரையிலான சுமார் 1.250 கிலோமீட்டர் வீதி மக்கள் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டது.

 இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த பகுதி வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனின் அனுமதிக்கமைய மக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. குறித்த வீதியில் காணப்பட்ட வீதித்தடைகள் இன்று காலை முதல் இராணுவத்தினரால் விலக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

தமிழர்களுக்காக எந்தவொரு சேவையையும் செய்யவில்லை!சித்தார்த்தன்

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தேர்தல் பரப்புரை கூட்டம் நேற்று (06) இரவு யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்றது. குறித்த ...