வெள்ளி, 18 அக்டோபர், 2024

லெபனானில் 55 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு - ஹிஸ்புல்லா

லெபனானில் நடந்த தாக்குதல்களில் இதுவரை 55 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பு, ஈரான் ஆதரவுடன் லெபனானில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

காசாவில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடந்து வரும் போரில், ஹமாஸ் அமைப்புக்கு ஹிஸ்புல்லா ஆதரவு தெரிவித்துள்ளது. அதோடு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் தொடர்ந்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதற்கு பதிலடியாக லெபனானில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த மோதல் காரணமாக லெபனானில் சுமார் 12 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே, லெபனானில் இதுவரை நடந்த தாக்குதலில் 55 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

மலையக தொழிலாளர்களுக்கு 2,000 ரூபா சம்பளத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும்!

நான் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,350 ரூபாய் அடிப்படை சம்பளத்தை பெற்றுக் கொடுத்துள்ளேன். ஆனால் தற்ப...