வியாழன், 12 செப்டம்பர், 2024

தமிழ் சினிமா: பாலியல் குற்றங்களை தடுக்க நடிகர் சங்கம் எடுத்துள்ள புதிய நடவடிக்கைகள்!!

மலையாள சினிமாவை உலுக்கிய நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின் தாக்கம் தமிழ் சினிமாவிலும் எதிரொலிக்கிறது. தமிழ் திரைத் துறையிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் சுரண்டல், பாலியல் துன்புறுத்தல்கள் ஆகியவை நடப்பதாக விவாதங்கள் கிளம்பியுள்ளன.

 

 கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 8ஆம் தேதி) நடந்த தமிழ் சினிமா நடிகர்களின் கூட்டமைப்பான தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் 68வது பேரவைக் கூட்டத்தில், பெண்களுக்கு எதிரான புகார்களை விசாரிப்பதற்கான குழு பற்றி அறிவிக்கப்பட்டது. 

இந்தக் குழு தமிழ் திரைத்துறையில், பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு ஒரு தீர்வைக் கொண்டு வருமா? சங்கத்தின் உறுப்பினர்கள், மூத்த சினிமா பத்திரிகையாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நடிகர்கள் என்ன சொல்கிறார்கள்?நடிகர் சங்கத்தில் ஏற்கெனவே 2019ஆம் ஆண்டு விசாகா கமிட்டி அமைக்கப்பட்டதாகவும், தற்போது அந்தக் குழுவில் வழக்கறிஞர்கள், பெண்களுக்கான தன்னார்வ அமைப்புகள், ஆகியோரை இணைக்க முடிவு செய்து, அக்குழுவுக்கென ஒரு மின்னஞ்சல் முகவரியையும் உருவாக்கியிருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

நடிகர் சங்க நிர்வாகிகள். மேலும் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் அக்குழுவின் தலைவரான நடிகர் ரோகிணி விசாகா கமிட்டியை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தனர். 

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவரான பூச்சி S. முருகன், கடந்த 2019ஆம் ஆண்டே தென்னிந்திய நடிகர் சங்கத்தில், பாலியல் புகார்களை விசாரிக்க விசாகா கமிட்டி அமைக்கப்பட்டதாகவும், செப்டம்பர் 8ஆம் தேதி நடந்த சங்கத்தின் பேரவைக் கூட்டத்தில் அதுபற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். “நடிகர் சங்கத்தில் ஏற்கெனவே இருந்த குழுவில் 5 பேர் இருந்தனர். தற்போது அக்குழுவில், ஒரு பெண் வழக்கறிஞர், பெண்களுக்கான ஒரு தன்னார்வ அமைப்பு ஆகியோரை இணைத்து அக்குழு புதுப்பிக்கப்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது,” என்றார்.

 மேலும், இந்தக் குழுவில் புகாரளிக்க ஏற்கெனவே ஒரு தொலைபேசி எண் இருந்ததாகவும், தற்போது அந்த எண்ணோடு சேர்த்து, புகாரளிக்க ஒரு புதிய மினனஞ்சல் முகவரியையும் சங்கம் உருவாக்கி இருப்பதாகவும் பூச்சி முருகன் தெரிவித்தார். புகார்கள் வரும் பட்சத்தில், அதை இந்தக் குழு விசாரித்து, அது உண்மையெனில் அதற்கு நடவடிக்கை எடுக்கும், தேவைப்படும் பட்சத்தில் காவல்துறையிடமும் அக்குழு புகார் அளிக்கும் என்றார் அவர். பேரவைக் கூட்டத்திற்கு முன்னர் ஒரு வாரமாக சங்கத்தில் ஆலோசிக்கப்பட்டு, விசாகா குழுவில் இந்தப் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

மேலும், புத்துயிர் கொடுக்கப்பட்டிருக்கும் விசாகா கமிட்டி, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களான பெண் நடிகர்கள் கொடுக்கும் புகார்களை மட்டும் விசாரித்தாலும், உறுப்பினர்கள் அல்லாத பெண் நடிகர்களுக்கு இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால், அவர்களுக்கும் வழிகாட்டுதலும் தார்மீக ஆதரவும் கொடுக்கும் என்றார் பூச்சி முருகன்.

இதோடு, நடிகர் சங்கத்தின் பேரவைக் கூட்டத் தீர்மானத்தில், பெண் நடிகர்களுக்கு ‘படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் தரமான உடை மாற்றும் அறை வசதி, கழிவறை வசதி மற்றும் உரிய பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய, தயாரிப்பாளர்களோடு பேசி ஆவன செய்யத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 8ஆம் தேதி நடந்த நடிகர் சங்கத்தின் பேரவைக் கூட்டத்தில், விசாகா குழுவின் தலைவரான நடிகை ரோகிணி, அக்குழுவைப் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் பேசினார். அப்போது அவர், பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் பெண் நடிகர்கள் விசாகா குழுவை அணுகிப் புகார் கொடுக்க வேண்டும் என்றும், அப்படிக் கொடுக்கப்படும் புகார் உறுதியானால், அதில் ஈடுபட்ட நபருக்கு 5 ஆண்டுகள் நடிக்கத் தடை விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

நடிகர் சங்கத்தின் விசாகா கமிட்டியை பற்றி மேலும் அறிந்துகொள்ள பிபிசி தமிழ் ரோகிணியைத் தொடர்பு கொண்டது. அப்போது அவர், இந்தக் குழுவில், வழக்கறிஞர்கள், தன்னார்வ அமைப்புகள், பாலினம் சார்ந்த மனநல ஆலோசகர்கள் ஆகியோரை இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்ததோடு, அதற்கு மேல் அதுபற்றி எதுவும் பேச மறுத்துவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஈழத் தமிழர்களின் தவிர்க்க முடியாத சுயநிர்ணயத்தை jvP எப்போதும் மறுத்தது.

ஒற்றையாட்சி அரசை ஒருங்கிணைத்து, கொழும்பில் அரச அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான அதன் நீண்டகால லட்சியத்தை நனவாக்கும் அமெரிக்க முயற்சிகளுக்கு ஜே.வி...