வெள்ளி, 20 செப்டம்பர், 2024

நெடுந்தீவு ஒரு வருடத்தின் பின்னர் பயணத்தை ஆரம்பித்த நெடுந்தாரகை!

சுமார் ஒரு வருடத்தின் பின்னர் நெடுந்தாரகை பயணிகள் படகு இன்றைய தினம் வியாழக்கிழமை (19.09.24) தனது சேவையை ஆரம்பித்துள்ளது. படகில் மேற்கொள்ளப்பட்ட திருத்தப்பணிகளை தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸினால் , வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் நெடுந்தாரகை பயணிகள் படகு உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது. 

நெடுந்தீவு இறந்குத்துறைக்கு சென்ற ஆளுநர் , படகை பார்வையிட்டார். இதுவரை காலம் மாகாண சபையின் பொறுப்பில் காணப்பட்ட இந்த படகானது 52 மில்லியன் ரூபா செலவில் திருத்தப்பட்டு, வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது .

தமது தீவில் நீண்டகாலமாக காணப்பட்ட போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்தமை தொடர்பில், ஆளுநருக்கு நெடுந்தீவு மக்கள் நன்றியை தெரிவித்தனர். பயணிகள் சேவையை ஆரம்பித்துள்ள நெடுந்தாரகை படகு தினமும் சேவையில் ஈடுபடவுள்ளது. நெடுந்தாரகை படகில் ஒரு தடவையில் 80 பேர் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டவருக்குப் பதவி உயர்வு.

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் 20 துணை வட்டாட்சியர்களுக்கு 06.09.2024 அன்று வட்டாட்சியராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டது.  இதில் தூத்து...