வெள்ளி, 24 ஜூலை, 2026

டெல்லியில் இணைய சேவை முடக்கம்.

டெல்லி ஜந்தர் மந்தர் சுற்றுவட்டார பகுதியில் இணைய சேவை முடக்கப்பட்டதற்கு எதிரான பொதுநல மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று அவசர வழக்காக விசாரிப்பதற்கு ஏற்றுக்கொண்டுள்ளது. 

 நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு புகார்களைக் கண்டித்து, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த ஜூன் 20 முதல் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இணைய சேவை மற்றும் மெட்ரோ சேவை முடக்கப்பட்டது. மூன்று நாட்களாக ஜந்தர் மந்தரைச் சுற்றியுள்ள 1.5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு மொபைல் இணைய சேவைகளை முடக்கப்பட்டது. 

இணைய முடக்கத்தால் ஜந்தர் மந்தர் மற்றும் அதன் அருகிலுள்ள கன்னாட் பிளேஸ் போன்ற வணிகப் பகுதிகளில் கடைகள், உணவகங்கள் மற்றும் அலுவலகங்கள் மாலை 6:30 மணிக்கே மூடப்பட்டு வணிக நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனால் பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வலியுறுத்தி இந்த மனுவை பொதுநல மனுவாக மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!!

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) பிடியாணை பிறப்பித்துள்ளது. கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில், குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் முன்னிலையாகாத காரணத்தினாலேயே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என்பதுடன், வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவரது பிணையாளர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை. இதற்கமைவாக, குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக பிடியாணை பிறப்பிப்பதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

டெங்கு மரணங்கள் 59 ஆக உயர்வு!!

நாட்டில் டெங்கு நோய் காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அந்த பிரிவு வௌியிட்டுள்ள புதிய அறிக்கையில் 80,114 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் ஆண்டின் இதுவரையில் 16,950 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

அதற்கு அடுத்ததாக கொழும்பு மாவட்டத்தில் 16,021 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதுதவிர ஏனைய மாவட்டங்களான மாத்தறையில் 5534 பேரும், கண்டியில் 5437 பேரும், களுத்துறையில் 5245 பேரும் இரத்தினபுரியில் 4482 பேரும், காலியில் 4430 பேரும் டெங்கு நோயினால் அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளனர். 

 2026 ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தின் முதல் 23 நாட்களில் மாத்திரம் 24,739 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

வியாழன், 23 ஜூலை, 2026

மட்டக்குளி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு

வத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பள்ளியாவத்தை, மட்டக்குளி பாலத்திற்கு அருகில் இன்று (23) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். 


குழந்தையொன்றின் பிறந்தநாள் விழா நடைபெற்ற மண்டபம் ஒன்றை நோக்கி இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

 இந்த சம்பவத்தில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

தென்மேற்கு சீனாவில் நிலச்சரிவில் 11 பேர் உயிரிழந்தனர்.

தென்மேற்கு சீன நகரமான சோங்கிங்கில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது. இதில் 50 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாகவும், 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் சீன அரசு ஊடகங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன. 


 காணாமல் போனவர்களின் உடல்களை மீட்கும் பணியில் சிறப்புப்a குழுக்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அரசுக்குச் சொந்தமான சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜூலை 17 அன்று ஏற்பட்ட மலைச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முன்னதாக 8 என்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

அடிப்படை உரிமைகளை மீறியதாக தேசபந்துவுக்கு எதிராக தீர்ப்பு!!

2022 ஆம் ஆண்டு ' அரகலய' போராட்டம் நடைபெற்ற காலப்பகுதியில், சமூக செயற்பாட்டாளரான அநுருத்த பண்டார என்ற இளைஞரைக் கைது செய்து தடுத்து வைத்தமையின் ஊடாக, அக்காலப்பகுதியில் மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றிய தேசபந்து தென்னக்கோன் மற்றும் கொழும்பு வடக்கு விசேட விசாரணைப் பிரிவின் அப்போதைய பொறுப்பதிகாரி நளின் ஸ்ரீயந்த ஆகியோர் அவரது அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 அநுருத்த பண்டார என்ற குறித்த இளைஞனால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை விசாரணை செய்ததன் பின்னரே,உயர் நீதிமன்றம் இன்று (23) இந்த தீர்ப்பை வௌியிட்டுள்ளது.

ராகுல் கைது விஜய் கண்டனம்

அறவழியில் போராடிய இளைஞர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கிய ராகுல் காந்தியை டெல்லி காவல்துறை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தது ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்” என்று தமிழக வெற்றிக் கழகம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. 

நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி, ஜூலை 20 நாடளுமன்றத்தை முற்றுகையிட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் பேரணியாகச் சென்றனர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதுடன், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்தனர். 

இதற்கிடையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு ஆதரவாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ராஜாஜி மார்க் பகுதியில் இருந்து பிரதமர் இல்லம் அமைந்துள்ள லோக் கல்யாண் மார்க் நோக்கி பேரணியாகச் சென்றனர். இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், பவன் கேரா உள்ளிட்ட மூத்த தலைவர்கள், கேரள முதல்வர் வி.டி.சதீசன் மற்றும் கட்சி எம்.பி.க்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

 பின்னர் பிரதமர் இல்லம் வெளியில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தியை மத்திய அமைச்சர்கள் ஜிதேந்திர சிங், பியூஷ் கோயல் ஆகியோர் சந்தித்து போராட்டத்தை முடித்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர். இருப்பினும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல், பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினரைப் போலீஸார் குண்டுகட்டாக தூக்கிச்சென்று பேருந்துகளில் ஏற்றிச் சென்றனர். 

அப்போது ராகுல் காந்தியின் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தது. தகவலறிந்து மந்திர் மார்க் போலீஸ் நிலையத்துக்கு சோனியா காந்தி விரைந்து சென்றார்.இந்நிலையில், ராகுல் காந்தியின் கைது நடவடிக்கையை தமிழக வெற்றிக் கழகம் வண்மையாக கண்டித்துள்ளது. 

இதுகுறித்து அக்கட்சி சார்பில் வெளியிட்டுள்ள கண்டன செய்தியில், “தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!

டெல்லியில் நடைபெற்ற இளைஞர்களின் அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி டெல்லி காவல்துறையால் இழுத்துச்செல்லப்பட்டும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றும் கைது செய்யப்பட்டது ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமானத் தாக்குதலாகும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

Thank You Google

Thank You Google
Thanks