வியாழன், 16 ஜூலை, 2026

சென்னையில் போக்சோ வழக்கில் கைதானவர் தப்பியோட்டம்!!

சென்னையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜா தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அம்பத்தூரில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ராஜா கைதானார். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் வயிற்று வலி என கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அம்பத்துாரைச் சேர்ந்தவர் ராஜா (வயது 20). இவர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கில், அம்பத்துார் மகளிர் போலீசாரால், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த மாதம் 15ம் தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தன் கிட்னியில் கல் இருப்பதால், வயிறு வலிப்பதாக புழல் சிறை போலீசாரிடம், ராஜா நேற்று மதியம் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, ராஜா உட்பட இரண்டு விசாரணை கைதிகளை, ஐந்து ஆயுதப்படை காவலர்கள், போலீஸ் வாகனத்தில், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அம்பத்துாரைச் சேர்ந்தவர் ராஜா (வயது 20). இவர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கில், அம்பத்துார் மகளிர் போலீசாரால், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த மாதம் 15ம் தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

தன் கிட்னியில் கல் இருப்பதால், வயிறு வலிப்பதாக புழல் சிறை போலீசாரிடம், ராஜா நேற்று மதியம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ராஜா உட்பட இரண்டு விசாரணை கைதிகளை, ஐந்து ஆயுதப்படை காவலர்கள், போலீஸ் வாகனத்தில், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிகிச்சைக்கு பின், மருத்துவமனையில் உள்ள உணவகத்திற்கு அழைத்துச் சென்றனர். 

அப்போது, காவலர்களின் கவனத்தை திசை திருப்பிய ராஜா, போலீசாரை ஏமாற்றி விட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து ராஜா தப்பிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து, மற்ற கைதியை உடனடியாக மூன்று காவலர்கள், புழல் சிறைக்கு அழைத்து சென்றனர். இரண்டு காவலர்கள், மருத்துவமனை முழுவதும் தேடியும் ராஜா கிடைக்கவில்லை. தலைமறைவான ராஜாவை போலீசார் தேடி வருகின்றனர்.

செம்மணி 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் நேற்று (15) ஆரம்பமாகியுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 32 நாட்கள் அகழ்வு பணிகள் இடம்பெற்றுள்ள நிலையில், கடந்த 23 ஆம் திகதியுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில் நேற்று முதல் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

மூன்றாம் கட்டத்தின் 33 ஆவது நாளான நேற்று புதிதாக 2 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவை இரண்டும் சிறுவர்களுடையதாகும். அதேவேளை இரண்டு என்புக்கூட்டு குவியல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளது. 
நேற்று என்புக்கூடுகள் எவையும் அகழ்ந்து எடுக்கப்படவில்லை. அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் இதுவரையில் 87 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், 414 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 409 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

கொழும்பில் சர்வதேச பாடசாலை ஆசிரியையும் அவரது கணவரும் கைது!!

கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் ஆசிரியை மற்றும் அவரது கணவர் ஆகியோர் 2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப் பொருள் தொகையுடன் மாதம்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு வடக்கு பிராந்திய புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனையின் போதே இந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதன்போது, சந்தேக நபரான ஆண்டமிருந்து 1 கிலோ 6 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளும், பெண்ணிடமிருந்து 149 கிராம் 150 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளின் போது, இவர்கள் 'மொதர மயூர' என்ற பிரபல போதைப்பொருள் கடத்தல்காரனின் கூட்டாளிகள் என்பது தெரியவந்துள்ளது.

 அத்துடன், இந்த தம்பதியினர் நீண்டகாலமாக இப்போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளமையும் விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது. இருப்பினும், சந்தேகநபரான பெண் பொலிஸ் விசாரணைகளின் போது, தான் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் சட்டப் பட்டப்படிப்பு படித்து வருவதாகவும், அதற்கான கல்விச் செலவுகளை ஈடுகட்டும் நோக்கிலேயே இந்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளின் பின்னர், சந்தேகநபரான பெண் மாளிகாகந்த நீதவான் நீதிமன்ற உத்தரவிவிற்கு அமைய 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அதேநேரம், சந்தேகநபரான ஆடவரிடம் நடத்தப்படும் விசாரணைகளின் பின்னர் அவர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

புதன், 15 ஜூலை, 2026

மேர்வின் சில்வா உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை!!

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இஷாரா செவ்வந்திக்கு எதிரான தடுப்புக்காவல்!

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்ட நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ வழக்கின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்திக்கு எதிராக மேலும் 30 நாள் தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளதாக கொழும்பு குற்றப் பிரிவு நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவிப்பதற்கான நடவடிக்கைகள் நேற்று (13.07.2026)மேற்கொள்ளப்பட்டன. 2025, பெப்ரவரி 19 அன்று, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் 5 ஆம் நீதிமன்ற அறையில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

இது குறித்து கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகள் இந்த விவரங்களை கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வாவிடம் சமர்ப்பித்துள்ளனர்.சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தடுப்புக்காவலை , ஒகஸ்ட் 12 ஆம் திகதி வரை நீடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் கொலை தொடர்பாக தற்போது வெளிநாட்டில் உள்ள, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி என சந்தேகிக்கப்படும் சுபுன் தயரத்ன என்ற ஹீனதியான மகேஷ் என்பவரைக் கைது செய்வதற்காக, இன்டர்போல் மூலம் பிடியாணை பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தயார் செய்துள்ளதாகக் குற்றப்பிரிவு நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது. 

 இதன்படி முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட நீதவான், தொடர்புடைய விசாரணைகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்குமாறு கொழும்பு குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்-மொத்த மரணங்கள் 31

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறை மோதலில் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவற்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதிகரிக்கும் மரணங்களின் எண்ணிக்கை: கடந்த ஜூலை மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகத்திற்குள் இரு கைதிக் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல், பின்னர் பெரும் வன்முறையாக வெடித்தது. இச்சம்பவத்தில் நேற்று (13) மற்றும் இன்று (14) அதிகாலை வேளையில் 25 மற்றும் 39 வயதுடைய இரண்டு இளம் சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இந்த மோதல் சம்பவத்தில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் மொத்த எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. 

தொடரும் சிகிச்சைகள்: ஏற்கனவே இந்த மோதல்களின் போது 21 சிறைக்கைதிகள் உயிரிழந்திருந்த நிலையில், தற்போது அதிகாரிகளின் மரணங்களையும் சேர்த்து ஒட்டுமொத்த மரணங்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. 

இவ்வதிரடி மோதலில் படுகாயமடைந்த மேலும் சில சிறைக்கைதிகளும், காவற்துறை மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், நீர்கொழும்பு வைத்தியசாலையிலும் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 இச்சம்பவம் குறித்து காவற்துறையினர் மற்றும் உயர்மட்டக் குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தென்தாமரைகுளம் சிறை காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சபரிவர்மன்!!

நாகர்கோவில் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்றதாகக் கூறி சபரிவர்மன்(34) என்ற இளைஞரை தென்தாமரைகுளம் போலீசார் ஜூலை 9 அன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட சபரிவர்மன் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் அவர் சிறையில் மர்மான முறையில் உயிரிழந்துள்ளார். 

உறவினர்கள் சிறை காவலர்கள் அவரை அடித்து கொலை செய்ததாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நேற்று அவரது உடல் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய அரசு மருத்துவமனை டாக்டர்கள் குழு பிரேத பரிசோதனை செய்தனர். அதன்பின் நீதிபதி நேற்று சிறைச்சாலையிலும் விசாரணை நடத்தினார். 

 சபரிவர்மனின் 4 பக்க பிரேதப் பரிசோதனை அறிக்கை நேற்று இரவு அவரது உறவினர்களிடம் அளிக்கப்பட்டது. அதில் சபரிவர்மன் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிறையில் சிறை காவலர்கள் அடித்து கொலை செய்ததும் உறுதி செய்யப்பட்டது. நேற்று இரவு சித்ரவதை மற்றும் படுகொலை தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், தலைமைக் காவலர் திருமலை நம்பி சுரேஷ், வார்டன்கள் சிவகுமார் மற்றும் ஜெகன் ஆகிய மூன்று சிறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இதனை தொடர்ந்து சபரிவர்மனின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து போராடி வருகின்றனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

சபரிவர்மனின் உறவினர்கள் பல்வேறு கோரிக்கை முன் வைத்துள்ளனர். அதாவது பாதிக்கப்பட்ட சபரிவர்மனின் மனைவிக்கு அரசு வேலை மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Thank You Google

Thank You Google
Thanks