சிரிக் அருகேயும், பந்தர் அப்பாஸ், கெஷ்ம் தீவு, சபாஹர் மற்றும் கொனாரக் ஆகிய பகுதிகளிலும் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க வீரர்களின் மரணங்களுக்காக ஈரான் "பல மடங்கு" விலை கொடுக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரான் தனது பதிலடித் தாக்குதல்களைத் தொடர்வதுடன் கடந்த சில மணிநேரங்களில் பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க நிலைகளை தாக்கியதாக வைத்ததாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது.ஹார்முஸ் நீரிணை வழியாக சென்ற 2 எண்ணெய் கப்பல்கள் கண்ணி வெடிகளில் வெடித்து சிதறியுள்ளதாகவும் கப்பல்களில் "பாரிய தீ" ஏற்பட்டுள்ளதாகவும் ஐ.ஆர்.ஜி.சி குறிப்பிட்டுள்ளது.
அரச செய்தி நிறுவனமான ஐஆர்ஐபி வெளியிட்ட ஓர் அறிக்கையில், இரண்டு கப்பல்களின் மாலுமிகளை மீட்புக் குழுவினர் வெளியேற்றி வருவதாகதெரிவித்துள்ளது.
ஈரானின் ஆதரவு பெற்ற யேமனில் உள்ள ஹூதிகள், சவூதி அரேபியாவுக்கு எதிராக கடல்வழி முற்றுகையை அறிவித்துள்ளதால் உலகளாவிய எரிசக்தி விநியோகம் மேலும் சீர்குலைக்கப்படும் என அச்சம் எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக