செவ்வாய், 28 ஜூலை, 2026

மகிந்தவிற்கு எதிராக வழக்கில் முக்கிய சாட்சி சஜின் வாஸ் குணவர்தன

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளித்துள்ளார். இந்தநிலையில் நேற்றைய தினம் (27-07-2026) அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார். 


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்கள் சுமார் 100 கோடி ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தப்படும் சம்பவம் தொடர்பில் அவர் சாட்சியமளித்துள்ளார்.

மேலும் தெரியவருகையில், இராணுவத் தலைமையகம் அமைந்திருந்த காணியை ஷாங்க்ரிலா ஹோட்டலுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையின் போது சுமார் 100 கோடி ரூபா இலஞ்சமாகப் பெறப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சஜின் வாஸ் குணவர்தன வாக்குமூலம் அளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks