இந்திய எல்லைக்கு மிக அருகில் உள்ள ஒரு விமானப்படை தளத்தில் குறைந்தது பதினொன்று J-20 போர் விமானங்கள் நிறுத்தப்பட்டிருப்பதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.
நம் நாட்டை இலக்காக கொண்டு முதல்முறையாக ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை சீனா நிலைநிறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய விமானப்படையில் ரஃபேல் மற்றும் சுகோய்-30 எம்கேஐ போன்ற 4 மற்றும் 4.5 தலைமுறை போர் விமானங்களே பயன்பாட்டில் உள்ளன.
5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் எதுவும் தற்போது இந்தியாவில் செயல்பாட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் இந்தியாவை இலக்காகக் கொண்டு, 5வது தலைமுறை போர் விமானங்களை சீனா நிலைநிறுத்தி உள்ளது, இந்தியாவிற்கான அச்சறுத்தலாகவே கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக