புதன், 8 ஜூலை, 2026

அமெரிக்க தாக்குதலில் ஈரான் இராணுவம் 8 பேர் பலி!!

அமெரிக்க நடத்திய தாக்குதலில் ஈரானிய இராணுவத்தினர் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனை ஈரானிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளதாக பி.பி.சி செய்தி வௌியிட்டுள்ளது. ஈரான் மீது இன்று இரவு தாக்குதல் நடத்தப்படும் என முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி கூறியிருந்த நிலையிலேயே இந்த தகவல் வௌியாகியுள்ளது.

இரவோடு இரவாக அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் ஈரானிய இராணுவத்தின் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 கொல்லப்பட்ட வீரர்கள் விமானப்படை மற்றும் கடற்படையில் பணியாற்றியவர்கள் என பல ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அந்த வீரர்கள் பண்டார் அப்பாஸ் மற்றும் புஷெர் ஆகிய பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டிருந்தவர்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks