இதன்படி கைதிகள் உரிமைகள் பாதுகாப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுதேஷ் நந்திமல் சில்வா மற்றும் அதன் தலைவரான சட்டத்தரணி சேனக பெரேரா ஆகியோர் சமூக ஊடகங்களில் இந்த விடயத்த பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த மரணங்கள் சிறை அதிகாரிகளால் திட்டமிடப்பட்ட பழிவாங்கும் செயல் என்று அக்குழு நேரடியாகத் தெரிவித்துள்ளது. பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து மாற்றப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த கைதி உயிரிழந்துள்ளார்.
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக குறித்த கைதி உயிரிழந்ததாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக