புதன், 6 மே, 2026

செம்மணி குழந்தையின் என்புக்கூடு- தங்க ஆபரணங்கள் மீட்பு!


செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் போது, ஒரு குழந்தையின் என்புக்கூடு உட்பட மேலும் இரு என்புக்கூடுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. 

8-ஆம் நாள் அகழ்வுப் பணியின் போது இந்த முக்கிய தடயங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்றைய அகழ்வுப் பணியின் போது மொத்தம் 5 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன. அவற்றில், ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட தொகுதிகளில் இருந்து ஒரு குழந்தையின் என்புக்கூடு மற்றும் மற்றொரு என்புக்கூடு என இரண்டு தொகுதிகள் வெளியே எடுக்கப்பட்டன. 

சிதைவடைந்த நிலையில் காணப்பட்ட குழந்தையின் என்புக்கூட்டைப் பாதுகாக்க, அதனை பண்டேஜ் துணிகளால் சுற்றி மண்ணுடன் சேர்த்து அகழ்ந்து எடுத்ததாக சட்டத்தரணி ஞா.ரனித்தா தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks