வெள்ளி, 8 மே, 2026

ராஜங்கனே சத்தாரதன தேரர் கைது!!

ராஜங்கனே சத்தாரதன என்ற தேரர், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

 பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோருக்கு சமூக வலைதளங்கள் ஊடாக அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தேரரை சங்க அமைப்பிலிருந்து நீக்குவதற்கு ஸ்ரீலங்கா ராமண்ய மகா நிகாயவின் செயற்குழு கடந்த ஆண்டு நடவடிக்கை எடுத்திருந்தது. 

 அவர் யூடியூப் செனல் ஒன்றை நடத்தி வருவதோடு, சமூக வலைதளங்கள் வாயிலாக அவர் வெளியிட்ட கருத்துக்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்தே அந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks