சனி, 2 மே, 2026

ஊழல் அநுரவின் அறிவிப்பு...!

மே தின உரைகள் என்பது வெறும் சம்பிரதாயப் பேச்சு அல்லாமல் அது கடந்த பல ஆண்டுகளாக இலங்கையில் நிலவி வந்த தண்டனை விடுப்பு கலாச்சாரத்திற்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாகப் பார்க்கப்படுகின்றது. 


 ஊழல் விசாரணைகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டன என்ற அவரின் அறிவிப்பு, சட்ட ரீதியான அதிரடி நடவடிக்கைகள் ஆரம்பமாகிவிட்டன என்பதற்கான வலுவான சமிக்ஞைகளை எடுத்துக்காட்டியுள்ளது.

அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்பதை ஜனாதிபதியின் நேற்றைய உரைகள் எடுத்துக்காட்டியிருந்தன. 

 தொடர்ச்சியாக அவர் வெளியிட்ட கருத்துக்கள் எதிர்க்கட்சிகளுக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுப்பதோடு அரசாங்கத்திற்குள் இருக்கும் அதிகாரிகளுக்கும் ஒரு எச்சரிக்கையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks