அல்லது சேதமடைந்தன அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த அறிக்கை அமெரிக்க நாடாளுமன்றத்தின், நாடாளுமன்ற ஆராய்ச்சி சேவையால் (CRS) தொகுக்கப்பட்டுள்ளது மற்றும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இணையதளத்திலும் கிடைக்கிறது.
சிஆர்எஸ், அரசியல் கட்சி பாகுபாடின்றி அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களுக்கும் கொள்கை சிக்கல்கள் குறித்த பகுப்பாய்வை வழங்குகிறது.
இந்த அறிக்கையில் அமெரிக்க பாதுகாப்புத் துறை, பென்டகன், அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையம் (CENTCOM) மற்றும் செய்தி கட்டுரைகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. சேதமடைந்த அல்லது அழிக்கப்பட்ட விமானங்களில் போர் விமானங்கள் மற்றும் டிரோன்கள் அடங்கும் என்று அவை கூறுகின்றன.
இரான் போருக்கான பாதுகாப்புத் துறையின் செலவு 29 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாகிவிட்டது என்று பென்டகன் அதிகாரி ஜூல்ஸ் டபிள்யூ. ஹர்ஸ்ட் சமீபத்தில் நாடாளுமன்றம் முன் அளித்த சாட்சியத்தையும் இந்த அறிக்கை மேற்கோள் காட்டுகிறது.ந்த அறிக்கை, மார்ச் 2, 2026 அன்று, "கூட்டணி படைகளின் தாக்குதல்" காரணமாக இரண்டு அமெரிக்க எப்-15ஈ (F-15E) ஸ்ட்ரைக் ஈகிள் போர் விமானங்கள் குவைத்தில் விழுந்து நொறுங்கியதை சென்ட்காம் (CENTCOM) உறுதிப்படுத்தியது.
இந்தச் சம்பவத்தில், இரண்டு விமானங்களிலும் இருந்த ஆறு பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேறினர்.
ஏப்ரல் 5, 2026 அன்று, இரானில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலின் போது ஒரு அமெரிக்க எப்-15ஈ விமானம் விபத்துக்குள்ளானதாகவும், தனித்தனியான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் போது இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் சென்ட்காம் தெரிவித்தது.
மார்ச் 19 அன்று வெளியான அறிக்கையை மேற்கோள் காட்டி, ஒவ்வொரு போர் நடவடிக்கையின் போதும், ஒரு எப்-35ஏ (F-35A) விமானம் இரானிய தரைப்படை தாக்குதலில் சேதமடைந்ததாக அந்த அறிக்கை கூறுகிறது.
அந்த நேரத்தில், இரானிய வான்வெளியில் ஒரு போர் நடவடிக்கைக்குப் பிறகு, ஒரு அமெரிக்க எப்-35 போர் விமானம் மத்திய கிழக்கில் உள்ள ஒரு விமான நிலையத்தில் அவசரகால நடவடிக்கையாக தரையிறக்கப்பட்டதை சென்ட்காம் உறுதிப்படுத்தியது.
விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும், விமானி பாதுகாப்பான நிலையில் இருப்பதாகவும் சென்ட்காம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக