வியாழன், 21 மே, 2026

தமிழக அமைச்சரவை பதவியேற்பு விழா |

வனத்துறை, வேளாண்மை, வருவாய், வீட்டுவசதி, கூட்டுறவு, குறு சிறு நடுத்தர தொழில்கள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அமைச்சர்கள்.நியமனம் செய்யப்படாமல் இருந்தது.

 இந்த நிலையில், த.வெ.க. மற்றும் காங்கிரஸ், எம்.எல்.ஏ.க்களை மட்டுமே கொண்டு, தமிழக அமைச்சரவை இன்று விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. தமிழக அமைச்சரவையில் புதிதாக 23 பேர் இணையவுள்ளதாக மக்கள் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 இந்நிலையில், இப்போது வெளியாகியிருக்கும் அமைச்சர் விரிவாக்க பட்டியலில் மேலும் 6 தலித் எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.. அவிநாசி தொகுதியில் கைக்குழந்தையோடு பிரசாரம் செய்து வென்ற ஆசிரியை கமலி அமைச்சராக்கப்பட்டிருக்கிறார். 

அதேமாதிரி, அதிமுகவை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ், சில மாதங்களுக்கு முன்பு தவெகவில் இணைந்து ராசிபுரத்தில் வென்றிருந்தார். 

அவரும் அமைச்சரவையில் இருக்கிறார். இதுபோக அரக்கோணம் தனி தொகுதியில் வென்ற காந்திராஜூக்கும் ஒட்டப்பிடாரம் தனி தொகுதியில் வென்ற மதன்ராஜூக்கும் அமைச்சரவையில் இடம் கிடைத்திருக்கிறது.

  
 மேலும், ஸ்ரீபெரும்புதூர் தனி தொகுதி தென்னரசுவும் அமைச்சரவையில் இருக்கிறார். 

 புதிதாக பதவி ஏற்றுள்ள அமைச்சர்கள் விவரம் பின்வருமாறு; 

1.ஸ்ரீநாத் (தூத்துக்குடி தொகுதி) 

2.கமலி.எஸ். (அவினாசி) 

3.சி.விஜயலட்சுமி (குமாரபாளையம்) 

4.ஆர்.வி.ரஞ்சித்குமார் 5.வினோத் (கும்பகோணம்) 

 6.ராஜீவ் (திருவாடானை) 

7.பி.ராஜ்குமார் (கடலூர்) 8.வி.காந்திராஜ் (அரக்கோணம்) 

9.பி.மதன் ராஜா (ஒட்டப்பிடாரம்) 10.கே.ஜெகதீஸ்வரி (ராஜபாளையம்) 11.எஸ்.ராஜேஷ்குமார் (காங்கிரஸ், கிள்ளியூர்) 12.எம்.விஜய் பாலாஜி (ஈரோடு) 13.டி.லோகேஷ் தமிழ்செல்வன் (ராசிபுரம்) 14.ஏ.விஜய் தமிழன் பார்த்திபன் (சேலம் தெற்கு) 15.ரமேஷ் (ஸ்ரீரங்கம்) 16.பி.விஸ்வநாதன் (காங்கிரஸ், மேலூர்) 17.ஆர்.குமார் (வேளச்சேரி) 18.கே.தென்னரசு (ஸ்ரீபெரும்புதூர்) 19. வி.சம்பத்குமார் (கோவை வடக்கு) 20.ஜெ.முகமது பர்வாஸ் (அறந்தாங்கி) 21.டி.சரத்குமார் (தாம்பரம்) 22.என்.மரிய வில்சன் (ஆர்.கே.நகர்) 23.கே.விக்னேஷ் (கிணற்றுக்கடவு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks