திருவாரூர் அருகே கீழகாவாதுகுடி கிராமத்தை சேர்த்தவர் பாரதிதாசன். இவர் வீட்டுமனை ரசிது வாங்குவதற்காக திருவாரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சாமிநாதனை நாடியிருக்கிறார் அப்போது வீட்டுமனை ரசிது வழங்குவதற்காக 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து பாரதிதாசன் திருவாரூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை திருவாரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதனிடம் கொடுப்பதற்காக பாரதிதாசன் சென்றுள்ளார்
அப்போது அங்கு மறைத்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன் மற்றும் அவருடைய உதவியாளர் சுரேஷ் ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வந்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக