வியாழன், 7 மே, 2026

பிரித்தானியாவில் இன்று தேர்தல்!!

பிரித்தானியாவில் நாளை உள்ளாட்சி மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் இடம்பெறவுள்ள நிலையில் இங்கிலாந்து பிராந்தியத்தில் நடைபெறும் உள்ளுராட்சி தேர்தல் களத்தில் தீவிர வலதுசாரி கட்சியான சீர்திருத்த பிரித்தானிய கட்சி ஒரு அரசியல் பூகம்பத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 இங்கிலாந்து பிராந்தியம் உட்பட பிரித்தானியாவில் உள்ளராட்சி சபைகள் மற்றும் முதல்வர்களின் தெரிவுக்குரிய தேர்தல்களும், ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் பிராந்தியங்களில் சட்ட மன்றங்களுக்கான தேர்தல்களும் நாளை இடம்பெறவுள்ளன. ஆளும் தொழிற்கட்சி கடந்த 2022 இல் நடந்திய தேர்ததில் அதிக இடங்களை வென்ற நிலையில் இந்த முறை றிபோர்ம் யூகே எனப்படும் நைஜல் பராஜ்ஜின் தீவிர வலதுசாரி கட்சி அதிக இடங்களை எடுக்கும் என எதிர்பர்க்கப்படுகிறது.

தொழிற் கட்சி மட்டுமல்ல வலது சாரிகளான கென்சர்வேடிவ் கட்சிக்கும் றிபோர்ம் யு.கே கட்சி பெரும் தாக்கத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படும், இந்த நிலையில் தமிழ் மக்களுடன் நல்ல தொடர்பாடலை கொண்ட தொழிற்கட்சி நாளைய தேர்தலில் தமிழர்களின் வாக்குகளை மீண்டும் உறுதி செய்யும் வகையில் தமிழில் ஒரு அறிக்கையிடலை வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவோன் மெக்டோனாவினால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் தொழிற்கட்சி ஈழ தமிழர்களுக்காக மேற்கொண்ட செயற்பாடுகள் தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks