வியாழன், 14 மே, 2026

நாகப்பட்டினம் அவரணி தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 சிறுவர்கள் பலி!!

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல்பத்து அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். 

நாகப்பட்டினம் அடுத்த அவரணி முதன்மைச் சாலை பகுதியை சேர்ந்த கலைவாணன் மகன் பிரவீன் சாய் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சாமி துரை என்பவர் மகன் பவன் சாய் இரு சிறுவர்களும் பள்ளி விடுமுறைக்காக சிக்கல்பத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்தனர். 

இந்நிலையில் வீடு கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட தண்ணீர் தொட்டியில் பிரவீன் சாய் மற்றும் பவன் சாய் விளையாடி கொண்டிருந்த போது தவறி விழுந்தார்கள். இந்நிலையில் சிறுவர்கள் சென்று நீண்ட நேரம் ஆகி வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடி சென்றார்கள். 

நீண்ட நேரம் ஆகியும் சந்தேகம் அடைந்ததால் அந்த வீட்டில் உள்ளவர்கள் தண்ணீர் தொட்டியை பார்த்தபோது இரு சிறுவர்களும் பரிதாபமாக உயிரிழந்தார். 

மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த வேளாங்கன்னி போலீசார் சிறுவர்களின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிறுவர்கள் விளையாடச் சென்றபோது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks