திங்கள், 11 மே, 2026

தமிழகத்தின் 17-வது சட்டசபையின் முதல் கூட்டம் தொடங்கியது.

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு புதிய திருப்பமாக, சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி வரிசையில் திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் அருகருகே அமர்ந்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தமிழகத்தில் 1967-ல் திமுக-வும், 1977-ல் அதிமுக-வும் முதன்முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றன. 

அன்று முதல் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இரு கட்சிகளும் மாறி மாறி ஆளுங்கட்சியாகவும், பிரதான எதிர்க்கட்சியாகவும் மட்டுமே இருந்து வந்துள்ளன. ஆனால், 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, புதிய அரசியல் சூழலில் இன்று இந்த இரு கட்சிகளும் எதிர்க்கட்சியாக, ஒரே வரிசையில் அமரும் நிலை ஏற்பட்டுள்ளது. 

அதிமுக் தொடர்ந்து இரண்டாவது முறையாக எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதும் இதுவே முதல்முறை ஆகும். மேலும், ஆளுங்கட்சி இருக்கைகளில் புதிய முகங்களும், நீண்டகாலம் ஆட்சி செய்த பாரம்பரியக் கட்சிகள் இரண்டும் எதிர்க்கட்சி வரிசையிலும் அமர்ந்திருப்பது தமிழக தேர்தல் வரலாற்றின் மிகப்பெரிய மாற்றமாக கருதப்படுகிறது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.அதன் பிறகு எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றதற்கான பதிவேட்டில் விஜய் கையெழுத்திட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks