திங்கள், 20 ஏப்ரல், 2026

ஈரான் கப்பலை சிறைபிடித்த அமெரிக்கா!!

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் அமெரிக்காவின் கடற்படைத் தடையை மீறிச் செல்ல முற்பட்ட ஈரானியக் சரக்குக் கப்பலை அமெரிக்கப் படைகள் சிறைபிடித்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் தமது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது, தூஸ்கா' என்ற பெயருடைய அந்தப் கப்பலை ஓமன் வளைகுடாவில் அமெரிக்க கடற்படை பலமுறை எச்சரித்ததாகவும், அதனை குறித்த கப்பலின் மாலுமிகள் பொருட்படுத்தாது சென்றமையினால் தாக்குதல் நடத்தி சிறைபிடித்ததாகவும் தெரிவித்துள்ளார். 

கைப்பற்றிய அந்தப் கப்பலில் என்ன இருக்கிறது என்பதைச் சோதித்து வருகின்றனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். ஈரானின் துறைமுகத்தை நோக்கிச் சென்ற அந்த கப்பலுக்கு அங்கு பயணிக்க வேண்டாம் என 6 மணிநேரமாக எச்சரிக்கை விடுக்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks