செவ்வாய், 7 ஏப்ரல், 2026

அமெரிக்க விமானங்களை அழித்த காணொளியை ஈரான் காவல்துறை வெளியிட்டது.

ஈரானிய சட்ட அமலாக்கப் படை (ஃபராஜா), சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானங்கள் இருந்த இடத்தின் காணொளியையும், சுட்டு வீழ்த்தப்பட்ட சி-130 விமானத்தின் விமானியின் ஆவணங்களையும் வெளியிட்டது. இஸ்பஹானின் தெற்குப் பகுதியில் அமெரிக்க சி-130 ஆதரவு விமானம் அழிக்கப்பட்டதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து, அப்பகுதியில் எதிரி விமானங்களை எதிர்கொண்ட நடவடிக்கையின் புதிய படங்களை ஈரானிய காவல்துறை வெளியிட்டது. 

 ஃபராஜாவின் கூற்றுப்படி, அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளுக்குச் சொந்தமான ஒரு ஆதரவு விமானம், நேற்று காவல்துறை சிறப்புப் படைப் பிரிவின் துப்பாக்கிச் சூட்டினால் அழிக்கப்பட்டது. 

இஸ்பஹான் மாகாணத்தின் தெற்குப் பகுதியில் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உள்ளூர் வட்டாரங்களும் தெரிவித்தன. தற்போது ஊடகங்களுக்குக் கிடைக்கப்பெற்றுள்ள இந்தக் காணொளியில், இந்த விமானத்தின் விமானி விட்டுச் சென்ற ஆவணங்கள் மற்றும் உபகரணங்களின் படங்கள் உள்ளன.

அந்த விமானி ஒரு பெண் என்று கூறப்படுகிறது. இந்தப் படங்களின் வெளியீடு, இந்த நடவடிக்கை குறித்து புதிய வெளிச்சம் பாய்ச்சுவதோடு, எதிரி அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் காவல்துறை சிறப்புப் படைகளின் திறனையும் தயார்நிலையையும் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது.
விமானியை மீட்கிறோம் என்ற போர்வையில் இஸ்பஹான் மற்றும் நட்டான்ஸ் ஆகிய பிரதேசங்களில் உள்ள அனுசக்தி நிலையத்துக்குள் அதிரடியாக புகுந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை திருடிய பின்பு அணு நிலையத்தை முற்றாக அழிப்பதற்கான சிறப்பு நடவடிக்கை தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் அமெரிக்க CIA அதிகாரி கூறியுள்ளார். 

 இதே கருத்தினையே ஈரானும் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைக்காக 155 விமானங்கள் களத்தில் ஈடுபடுத்தப் பட்டிருந்தது. கற்பனை செய்து பாருங்கள். இவ்வளவு பிரமாண்டமாக விமானங்கள் ஈடுபடுத்தப்பட்ட ஒரு குறிப்பிட்ட பிராந்தியம் எவ்வாறு இருந்திருக்கும்? 

 ஈரானிய இராணுவ நிலைகள் மீது ஒரு அணியினர் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்க, வேறு இடங்களில் இருந்து உதவிக்கு வருவதனை தடுக்கும் நோக்கில் இன்னுமொரு அணியினர் வீதிகளை உடைத்து தடுத்துக்கொண்டிருக்க, விசேட படையினர் அணு உலைக்குள் ஊடுருவ முயற்சித்துள்ளனர். அத்தனை முயற்சியையும் தடுத்துள்ளனர்.

 அமெரிக்காவின் முழு பலத்தினையும் பாவித்த இவ்வாறான நடவடிக்கையை தடுத்து நிறுத்தியதன் காரணமாகவே ஈரானிய படையினர் திறமையானவர்கள் என்று தன்னை அறியாமலேயே ட்ரம்ப் கூறியுள்ளார்.

 இவ்வாறான நடவடிக்கை தோல்வியடைந்தால், அது அமெரிக்காவுக்கு பாரிய அவமானமும், தலைக்குணிவும் ஏற்படும் என்ற காரணத்தினாலேயே விமானியை மீட்கும் நடவடிக்கை என்ற பெயரில் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

 இந்த நடவடிக்கை வெற்றியடைந்திருந்தால், வெனிசுவேலா ஜனாதிபதி மதுரோவை கடத்திய பின்பு கொண்டாடியது போன்று வெற்றி கொண்டாட்டம் முழங்கியிருக்கும். செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கைப்பற்றி எமது இலக்கை அடைந்துள்ளோம், போரில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளோம் என்ற அறிவிப்புடன் டொனால்ட் ட்ரம், ஒருதலைப்பட்சமான போர் நிறுத்தத்தை அறிவித்திருப்பார். 

 எனவே இஸ்பஹான், நட்டான்ஸ் அணு உலைகளை தகர்க்கும் முயற்சி பாரிய தோல்வியில் முடிவடைந்துள்ளது. இந்த தோல்வியினால் ஏற்பட்ட மன விரக்தியின் பிரதிபலிப்புத்தான் அநாகரிகமான சொற்களுடனான ட்ரம்பின் சமூக வலைத்தள பதிவாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks