செவ்வாய், 7 ஏப்ரல், 2026

யாழ்-மருதனார்மடம், கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!

யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம், பூவாடை வீதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து அடையாளம் காணப்படாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (07) காலை மீட்கப்பட்டுள்ளது. 


 இச்சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது, குறித்த கிணற்றிலிருந்து விவசாயப் பயிர்களுக்கு நீர் இறைப்பதற்காகச் சென்ற விவசாயி ஒருவர், கிணற்றிற்கு அருகாமையில் பாதணி (செருப்பு) இருப்பதைக் கண்டுள்ளார். 

இதனால் சந்தேகமடைந்த அவர் கிணற்றினுள் எட்டிப் பார்த்தபோது, அங்கு ஆண் ஒருவரின் சடலம் நீரில் மூழ்கிய நிலையில் இருப்பதைக் கவனித்துள்ளார். இது குறித்து அவர் உடனடியாக கிராம அலுவலருக்குத் தகவல் வழங்கியுள்ளார். மீட்கப்பட்ட சடலத்தின் கழுத்தில் கயிறு சுற்றப்பட்ட நிலையில், கிணற்றின் அடியில் காணப்பட்டுள்ளது. 

எனவே, குறித்த நபரை யாராவது அடித்துக் கொலை செய்த பின்னர் சடலத்தைக் கிணற்றுக்குள் வீசியிருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. உயிரிழந்தவர் யார் என்பது குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இச்சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.அத்துடன் குறித்த நபரின் மோட்டார் சைக்கிளும் கிணற்றுக்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks