அந்த வகையில்,
தற்போது பிலிப்பைன்ஸ், அவசர நிலை அறிவித்திருக்கிறது.நம்மை போலவே பிலிப்பைன்ஸும் எரிபொருளுக்கு இறக்குமதியைதான் அதிக அளவு நம்பியிருக்கிறது. போர், இறக்குமதியை பாதித்திருப்பதால் தற்போது எமெர்ஜென்சியை அறிவித்திருக்கிறது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் பெரிய அளவுக்கு எண்ணெய் வளம் கிடையாது. எனவே 90%க்கு அதிகமான எண்ணெய் தேவைக்கு மத்திய கிழக்கு நாடுகளைதான் அது சார்ந்திருக்கிறது.
குறிப்பாக சவுதி, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளிலிருந்து எண்ணெய்யை வாங்கி, தங்கள் நாட்டில் சுத்திகரிப்பு செய்து பயன்படுத்துகிறது.
இதில் என்ன பிரச்சனை எனில், பிலிப்பைன்ஸில் ஒரே ஒரு சுத்திகரிப்பு நிலையம் மட்டுமே இருக்கிறது. எரிபொருள் விலை எனவே பெரும்பாலும், கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கு பதில், நேரடியாக பெட்ரோல், டீசலையே வாங்கி வருகிறது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கொஞ்சம் எகிறினாலும் கூட, பிலிப்பைன்ஸில் பெட்ரோல் டீசல் விலை உச்சத்தை தொட்டுவிடும்.
தற்போது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை, பேரலுக்கு 120 டாலரை தொட்டிருக்கிறது.
இதன் காரணமாக, ஒரு லிட்டர் பெட்ரோல் – ரூ.157-176 ஒரு லிட்டர் டீசல் – ரூ. 204-210 ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் – ரூ.212 அரசு எடுத்த நடவடிக்கை என விற்கப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் போர் காரணமாக எரிபொருள் விலை ரூ.37 அதிகரித்திருக்கிறது. எனவே நிலைமையை கண்ட்ரோல் செய்ய அந்நாட்டு அரசு எமெர்ஜென்சியை அறிவித்திருக்கிறது.
இனி அரசுதான் எரிபொருளை இறக்குமதி செய்யும். விலை உயர்வை கட்டுப்படுத்த, எரிபொருளை கள்ள சந்தையில் பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மானியம் அறிவிப்பு அதேபோல,
பொது போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.7,700 வரை மானியம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சில நகரங்களில் மாணவர்களுக்கும், தொழிலளார்களுக்கும் இலவச பேருந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மறுபுறம் பொருளாதார தடை விதிக்கப்பட்ட ஈரான் மற்றும் வெனிசுலாவிடமிருந்து எண்ணெய் வாங்க அமெரிக்காவிடம் பெர்மிஷன் கேட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக