செவ்வாய், 20 ஜனவரி, 2026

கர்நாடக ராச லீலை டிஜிபி சஸ்பெண்ட்

கர்நாடக மாநில போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவ், தனது அலுவலகத்தில் பணியில் இருந்தபோது பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. இது சர்ச்சையான நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது 

கர்நாடக மாநில அரசு. பெண்ணுடன் அவர் இருக்கும் சுமார் மூன்று வீடியோக்கள் ஒரே கிளிப்பாக வெளியானது. இது சமூக வலைதளத்தில் அதிகளவில் பகிரப்பட்டது. ஏற்கெனவே, டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளான நடிகை ரன்யா ராவ், தங்கம் கடத்திய வழக்கில் கட்டாய விடுப்பில் அவர் சென்றிருந்தார். 

அதை அண்மையில் ரத்து செய்து, டிசிஆர்இ பிரிவின் டிஜிபியாக அவரை கர்நாடக அரசு நியமித்தது. இந்தச் சூழலில் தற்போது இந்த வீடியோ விவகாரத்தின் மூலம் மீண்டும் அவர் சர்ச்சைக்குள் சிக்கியுள்ளார். தற்போது அவரை கர்நாடக அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks