ஈரான் மீதான சாத்தியமான ராணுவ நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி டிரம்ப், இது ஒரு “பெரிய கடற்படைப் படை” (Big Armada) என்று வர்ணித்துள்ளார்.
ஈரானில் போராட்டக்காரர்களுக்கு எதிராக நடத்தப்படும் அடக்குமுறைகள் மற்றும் ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் குறித்து எச்சரித்துள்ள அவர், “என்ன நடக்கிறது என்று பார்ப்போம். நான் எடுக்கப்போகும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இப்போது விவரிக்க விரும்பவில்லை” எனக் கூறி, தனது வழக்கமான மர்மமான பாணியில் ஈரானுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.
இப்பிராந்தியத்தில் உள்ள சுமார் 30,000 அமெரிக்க துருப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்தல், ஈரானில் நடக்கும் உள்நாட்டு போராட்டங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சர்வதேச ரீதியில் நெருக்கடி கொடுத்தல், ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கினால், 2025 ஜூன் மாதம் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களை விடக் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்ற எச்சரிக்கையை உறுதிப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களைவெளிப்படுத்தும், வாஷிங்டனின் இந்த அதிரடி நகர்வு, மத்திய கிழக்கு நாடுகளிடையே பெரும் எதிர்பார்ப்பையும், விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக