திங்கள், 26 ஜனவரி, 2026

நிரந்தர ஆசிரிய நியமனம் கோரி உண்ணாவிரதப் போராட்டம்!

ஆசிரியராக 6 வருடங்கள் பணியாற்றிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர ஆசிரிய நியமனம் கோரி கொழும்பில் ஜனாதிபதி செயலகம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபையினால் முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் மற்றும் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான உணவுக்கொடுப்பனவு என்பன அதிகரிக்கப்பட்டுள்ளன. 

கொழும்பு மாநகர ஆணையாளர் பாலித நாணயக்கார இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுவரை வழங்கப்பட்டு வந்த ரூ. 20,000 மாதாந்த சம்பளம், இனி ரூ. 30,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அதாவது 10,000 ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய சம்பள உயர்வு வரும் பெப்ரவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை கொழும்பு மாநகர சபைக்குள் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து மத அறநெறிப் பாடசாலைகளிலும் கற்கும் மாணவர்களுக்கான காலை உணவுக்கான கொடுப்பனவு ரூ. 60 இல் இருந்து ரூ. 100 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மாநகர சபைக்குட்பட்ட கல்விச் சேவையை வலுப்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks