என்னைத் தொட்டால் நீ கெட்ட என்று ஈரான் ராணுவமும், போர் செய்தே தீருவேன் என்று அமெரிக்க ராணுவமும், வாஷிங்டன் போருக்கு தயார் என்றால் மாஸ்கோவும் தயார் என்று மல்லு கட்டி நிற்கின்றது
உலகம்
மேலும் எந்த நாடு குறுக்கே வந்தாலும் நான் கிரீன்லாந்தை பிடித்தே தீருவேன் என்றும், வெனிசுலா நாட்டில் உள்ள பெட்ரோல் அமெரிக்காவுக்கே சொந்தம் என்றும் அரைகூவல் விடுத்துள்ளார் ட்ரம்ப்
இந்நிலையில் தென் சீனக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த அமெரிக்காவின் USS Abraham Lincon என்னும் விமானம் தாங்கிக் கப்பலை ஈரான நோக்கி நகர்த்துகின்றது.
அமெரிக்கா. தற்போதைய சூழலில் இஸ்ரேல், இங்கிலாந்து நாடுகளே பதட்டமாகவே உள்ளன
இதில் இஸ்ரேல் போர் செய்த களைப்பில் உட்கார்ந்திருக்கிறது. இருந்தாலும் கோழி சோறு கிடைத்தால் நான் முழுவதையும் சாப்பிடுவேன் என்று எண்ணத்தில் இஸ்ரேல் இருக்கின்றது.
இங்கிலாந்தோ தனது பொருளாதாரத்தை எண்ணி அமைதியாக இருக்கின்றது. இருந்தாலும் தன் எஜமான் என்ன உத்தரவு போடுகிறாரோ என்று எண்ணி தன் ராணுவத்தை தயார் படுத்துகின்றது
இந்நிலையில் சீனா, ரஷ்யா, ஈரான் தென்னாப்பிரிக்க நாடுகளின் கடற்படை பயிற்சி நடந்து கொண்டிருக்கிறது.
சீனா, ரஷ்யா மற்றும் வடகொரியா நாடுகளிடம் கொடூரமான ஆயுதங்கள் உண்டு. அணு ஆயுதங்கள், ஹைட்ரஜன் குண்டுகள் மற்றும் எல்லா வகையான ஆயுதங்களையும் கொண்ட நாடுகள் இவை
ஹைட்ரஜன் குண்டுகள் இரண்டு வகை உண்டு.
ஒன்று நிலத்தில் வெடிக்கும். மற்றொன்று கடல் நீரின் அடியில் வெடிக்கும் பேரழிவு குண்டுகள். இது ஆழிப் பேரழிவுகளை ஏற்படுத்தும் குண்டுகள். இது சுனாமி போல் தாக்கக்கூடிய குண்டுகள்
இந்த ஹைட்ரஜன் குண்டுகள் மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
காரணம் இவைகளை வெடிக்க செய்தால் சுனாமி அலைகள் உருவாகி நாட்டை அழிக்கும். இந்த வகை குண்டுகள் ரஷ்யா, வடகொரியா ஆகிய நாடுகளிடம் கண்டிப்பாக உண்டு
இப்படிப்பட்ட ஆயுதங்கள் இருக்கும் நாடுகளிடையே இப்போது உள்ள சூழ்நிலையில் போர் உருவானால் ஈரான் மட்டுமல்ல ஐரோப்ப நாடுகள் மற்றும் ஏன் அமெரிக்காவும் சேர்ந்து அழியும்.
ஆனால் இது நாசமா போன ட்ரம்புக்கு தெரியுமா என்று தெரியவில்லை
நவீன தொழில்நுட்ப ஆயுதங்கள் எங்களிடம் இருக்கின்றன என்று ஆட்டம் போடும் அமெரிக்கா கண்டிப்பாக இந்த ஆயுத போட்டியில் மூழ்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
ஹிட்லர்கள் தோன்றும் போது, அவரை எதிர்க்க ஸ்டாலின்களும் இருக்கத்தான் செய்தார்கள்.
இப்போதும் அப்படியே, டிரம்ப் என்று ஒருவர் இருந்தால் புதின் என்று ஒருவர் இருக்கத்தான் செய்வார்
இருந்தாலும் ட்ரம்பின் அட்டகாசம் தொடர்ந்தால் ஒட்டுமொத்தம் உலகமும் முடங்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை, டாலரை வைத்து மிரட்டிக் கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு எதிராக ஒட்டுமொத்த நாடுகளும் ஒன்றிணை வேண்டிய நேரம் இது
அனைத்து நாடுகளும் தங்களது நாட்டு நலனை கருத்தில் கொண்டு ஒன்று சேர்ந்து அமெரிக்காவை புறக்கணிக்க வேண்டும்.
இவ்வளவு நாளும் அமெரிக்கா பொருளாதார தடை போட்டு கொண்டிருக்கிறது. இனி அனைத்து நாடுகளும் அமெரிக்க மீது பொருளாதார தடை போட வேண்டும்
மேலும் டாலருக்கு மாற்று ஏற்பாடு செய்தாக வேண்டிய சூழ்நிலைக்கு உலகம் தள்ளப்பட்டு இருக்கின்றது.
இல்லையென்றால் உலக நாடுகள் வருங்காலத்தில் மிகப்பெரிய சிக்கலை சந்திக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
.வாகைத்தமிழ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக