திங்கள், 5 ஜனவரி, 2026

போதையில், சாரதி அனுமதிப்பத்திரமின்றி பேருந்தை செலுத்திய இ.போ.ச சாரதி!!

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை வீதியில் பயணிகளின் உயிரோடு விளையாடிய இலங்கை போக்குவரத்துச் சபைச் (SLTB) சாரதி ஒருவர் காவற்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.


நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) அல்லைப்பிட்டி சந்திக்கு அருகாமையில் ஊர்காவற்துறை காவற்துறையினர் வீதி போக்குவரத்து கண்காணிப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது அந்த வழியாக வந்த இ.போ.ச பேருந்து ஒன்று அதிவேகமாகவும், ஆபத்தான முறையிலும் செல்வதை காவற்துறையினர் அவதானித்தனர்.சந்தேகமடைந்த காவற்துறையினர் பேருந்தை மறித்து சோதனை செய்தபோது பின்வரும் சட்டவிரோத செயல்கள் கண்டறியப்பட்டன.

இதனை அடுத்து, போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை மற்றும் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயற்பட்டமைக்காக சாரதி உடனடியாகக் கைது செய்யப்பட்டார். 

பேருந்து ஊர்காவற்துறை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

பொது போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ள ஒரு சாரதியே இவ்வாறான பொறுப்பற்ற செயலில் ஈடுபட்டது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks