சனி, 17 ஜனவரி, 2026

எம்ஜிஆர் கனவை நிறைவேற்றுவோம்- மோடி

எம்ஜிஆர் ஆற்றிய பங்கு மகத்தானது. அவரது தொலைநோக்கு பார்வையை நனவாக்க தொடர்ந்து பாடுபடுவோம்,’ என்று எம்ஜிஆரின் பிறந்த நாளில் பிரதமர் மோடி உறுதி பூண்டுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், ‘எம்ஜிஆரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு அவரது பங்களிப்பு மகத்தானது. தமிழ் கலாச்சாரத்தைப் பிரபலப்படுத்துவதிலும் அவரது பங்கு அதே அளவுக்குக் குறிப்பிடத்தக்கது.


 சமூகத்திற்கான அவரது தொலைநோக்குப் பார்வையை நனவாக்க நாங்கள் எப்போதும் பாடுபடுவோம்,’ எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், எம்ஜிஆரின் பெருமையைப் போற்றும் விதமாக ஒரு வீடியோவையும் பிரதமர் மோடி பகிர்ந்திருந்தார். 

அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது; எம்ஜிஆர் சினிமாத்துறையில் இருந்து அரசியல் மேடை வரை மக்கள் இதயங்களில் ஆட்சி செய்தார். அவரது வாழ்க்கை, அவரது முழு அரசியல் பயணமும் ஏழைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. 

ஏழைகளுக்கு மரியாதைக்குரிய வாழ்க்கையை உறுதி செய்வதற்காக அவர் அயராது உழைத்தார். பாரத ரத்னா எம்ஜிஆரின் லட்சியங்களை நிறைவேற்ற இன்று நாம் அனைவரும் பாடுபடுகிறோம். 

அவர் தரமான கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்புக்காகப் பாடுபட்டார்.அதனால் தான் சமூகத்தின் இளைஞர்களும், பெண்களும் அவரை மிகவும் மதிக்கிறார்கள்.அதனால் தான் இன்றும் கூட, சமூகத்தின் ஏழைப் பிரிவினர் அவரை தங்கள் மிகச்சிறந்த தலைவர் என்று அழைக்கிறார்கள். பாரத ரத்னா எம்ஜிஆருக்கு நான் வணக்கம் மற்றும் அஞ்சலியை செலுத்துகிறேன், எனக் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks