புதன், 21 ஜனவரி, 2026

நிட்டம்புவ 900 மில்லியன் பெறுமதியான போதை ஒருவர் கைது.

நிட்டம்புவ பிரதேசத்தில் 60 கிலோ கிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 


 கோணஹேன பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலொன்றிற்கு அமைய, நிட்டம்புவ - அரலிய ஒழுங்கை, பின்னகொல்லவத்தை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்தப் போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. 

 இதன்போது, 61 கிலோ 838 கிராம் ஐஸ் போதைப்பொருளை முச்சக்கர வண்டி ஒன்றில் கடத்திச் சென்றுகொண்டிருந்த போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

 இதன் பெறுமதி 90 கோடி ரூபாவிற்கும் அதிகம் என பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். இந்தச் சந்தேக நபர், தற்போது வெளிநாட்டில் உள்ள திட்டமிடப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களான 'டுபாய் வருண', 'மொஹமட் சித்திக்' மற்றும் தற்போது சிறையிலுள்ள திலிந்து சஞ்சீவ அல்லது "லேனா" ஆகியோரின் நெருங்கிய சகா என்பது தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks