வரவேற்பு சீனாவின் தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நேற்று துவங்கியது.
இது இன்று நிறைவு பெறுகிறது. இந்த அமைப்பில் இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
பிரதமர் மோடி கடைசியாக 2018ல் சீனாவின் வூஹானுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார்.
அதன்பின் கொரோனா தொற்று, லடாக்கின் கல்வான் எல்லையில் இந்திய - சீன வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதல் போன்ற காரணங்களால் பிரதமர் சீனாவுக்கு செல்வதை தவிர்த்தார். அதன் பின் இரு நாடுகளும் எல்லை பிரச்னைக்கு பேச்சு நடத்தி தீர்வு காண முன் வந்தன.கடந்த 2022ல் தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் பாலியில் ஜி - 20 உச்சி மாநாடு நடந்தது.
எல்லை பிரச்னைக்கு பின் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் இதில் முதல் முறையாக நேரில் சந்தித்து பேசினர். இது இரு தரப்பு உறவை சீரமைத்தது. இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீத வரியை விதித்தார். சீனாவுக்கு பொருளாதார பற்றாக்குறையை காரணம் காட்டி, இதே அளவு வரி விதித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக