வெள்ளி, 12 டிசம்பர், 2025

களுத்துறை, இரத்தினபுரி கடும் மின்னல் குறித்து எச்சரிக்கை!!

களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு கடும் மின்னல் குறித்த எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த பிரதேசங்களில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 


இந்த அறிவித்தல் இன்று (12) நண்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், இன்று இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும். இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks