ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடிமக்கள் அதிகாரத்தின் தலைவர் ஜமுனி கமந்த துஷார செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக வாக்குமூலங்களை வழங்குவதற்காக அவர் நாளை (டிசம்பர் 30, செவ்வாய்க்கிழமை) ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.
சொத்துக்கள் எவ்வாறு திரட்டப்பட்டன என்பது குறித்து பணமோசடி சட்டத்தின் கீழ் இந்த விசாரணைகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை சட்டத்தின்படி, மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொரு ஆண்டும் தங்களது சொத்து மற்றும் கடன் விபரங்களை (Asset Declaration) சமர்ப்பிப்பது கட்டாயமாகும். இதில் ஏதேனும் முரண்பாடுகள் அல்லது கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் கண்டறியப்பட்டால், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு தன்னிச்சையாகவோ அல்லது முறைப்பாட்டின் அடிப்படையிலோ விசாரணை நடத்தும் அதிகாரம் உண்டு.விசாரணைக்குள்ளாகும் அமைச்சர்கள்:
பிமல் ரத்நாயக்க
வசந்த சமரசிங்க
குமார ஜெயக்கொடி
சுனில் ஹந்துன்னெத்தி
நளிந்த ஜெயதிஸ்ஸ
சுனில் வட்டகல (பிரதி அமைச்சர்)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக